Pages

பிரியாணி கத்திரிக்காய்

தேவையான பொருட்கள் :

  1. கத்திரிக்காய் - சிறியது 1/4 கிலோ
  2. வெங்காயம் - 2
  3. மிளகு - 1/2 ஸ்பூன்
  4. சீரகம் - 1/2ஸ்பூன்
  5. புலி - 1சிறிய உருண்டை
  6. கருவேபிள்ளை- 5
  7. மிளகாய் பொடி - 1ஸ்பூன்
  8. உப்பு - 1 1/2 ஸ்பூன்
  9. எண்ணெய் - 4 ஸ்பூன்
வருத்து அரைக்க :

  1. எள்ளு - 2ஸ்பூன்
  2. சீரகம் - 2 ஸ்பூன்

செய்முறை :

  1. நன்றாக எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் , கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் , வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. அதனுடன் நீளமாக வெட்டிய கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.
  3. கத்திரிக்காய் பாதி வெந்ததும் உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறவும்.
  4. அதனுடன் கரைத்து வைத்த புலி தண்ணீர் உற்றி கிளறவும் .
  5. பின்பு சீரகம்,எள்ளு வருத்து அரைத்து கத்திரிக்காய் கலவையோடு சேர்த்து சிம் ல் வைத்து சமைக்கவும்.
  6. கத்திரிக்காய் வெந்ததும் பிரியாணியுடன் வைத்து அசத்தவும்.
குறிப்பு : கர்ப்பிணிகள்எள்ளு தவிர்த்து சமைத்தால் நன்று.

0 comments:

Post a Comment