Pages

சிக்கன் குருமா

தேவையான பொருட்கள் :

  1. சிக்கன் - 250 கிராம்
  2. வெங்காயம் - 2
  3. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  4. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  5. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  6. தனியா தூள் - 1 ஸ்பூன்
  7. தயிர் - 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  9. உப்பு - 2 ஸ்பூன்

செய்முறை :

  1. முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனிய தூள் ,உப்பு போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  5. அதில் சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
  6. சிக்கன் மூடிவைத்து சமைக்கும் பொழுது அதில் இருந்து வரும் தண்ணீருடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  7. கொத்தமல்லி தூவி சூடான சாதம், சப்பாத்தி, தோசையுடன்பரிமாறவும்.

செட்டிநாட்டு கோழிக்குழம்பு


தேவையான பொருட்கள் :     

கோழி - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 3ஸ்பூன்
தனியா பொடி - 4ஸ்பூன்

அரைக்க தேவையானவை :

மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 1
உப்பு - 11/2 ஸ்பூன்

தாளிக்க தேவையானவை :

நல்லெண்ணெய் - 4ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 1
அன்னாசிப்பூ - 2
சோம்பு - 1/2ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்

செய்முறை :

  1. ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.
  3. வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.

சிக்கன் 65



தேவையான பொருட்கள் :
  1. சிக்கன் - 1/2 கிலோ
  2. மிளகாய்ப்பொடி - 2 1/2 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  4. கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
  5. இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  6. முட்டையின் வெள்ளைக்கரு - 1
  7. சோயா சாஸ் - 1/4 ஸ்பூன்
  8. கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்
  9. அரிசி மாவு- 1 ஸ்பூன்
  10. உப்பு -2 ஸ்பூன்
  11. கேசரி கலர் பவுடர் - சிறிது
  12. தயிர் - 1 ஸ்பூன்

செய்முறை:

  1. சிக்கன்எலுப்பில்லாமல் அல்லது எல்லும்புடன் சிக்கன் 65 செய்யலாம். 
  2. கொடுத்துள்ளவற்றை சிக்கன்ல்பிசறி ஃப்ரிட்ஜில் மூன்று அல்லது நாலு  மணிநேரம் ஊறவைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு மீடியம் தீயில் பொரித்து எண்ணெய்யை நன்கு வடித்து விடவும்.