Pages

பன்னீர் & பச்சை பட்டாணி புலாவ்

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -4
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்
உப்பு -2 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிது
பச்சை பட்டாணி - 1/4 கப்
பொறித்த பன்னீர் துண்டுகள் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய்- 4 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
பாஸ்மதி அரிசி - 1 கப்

செய்முறை :

  1. முதலில்பாஸ்மதி அரிசி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. Electric Rice cookerல் எண்ணெய் உற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
  3. அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதிங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், புதினா போட்டு வதக்கவும்.
  5. பிறகு ஊறவைத்து இருக்கும் பாஸ்மதி அரிசி போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதில் பச்சை பட்டாணி, பன்னீர் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் 2 1/4 cup தண்ணீர் உற்றி மூடிவைக்கவும்.
  6. பின் இறக்கி கொத்தமல்லி தூவி சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment