Pages

கொடமிளகாய் சாதம்


செய்முறை :

கொடமிளகாய் - 4
முந்தரி பருப்பு - 8
கருவேப்பில்லை - சிறிது
கடுகு - ½ ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
க.மிளகாய்- 3
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்

அரைக்க தேவையானவை:

கடலை பருப்பு - 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
பட்டை- 1
முழு தனியா (அ) தனியா தூள் - 2 ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
வேர்கடலை- 1 ஸ்பூன்
க.மிளகாய்- 6


செய்முறை :
  1. முதலில் வறுத்து அரைக்க வேண்டியவை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும்.ஆறியதும் மிக்ஸ்யில் அரைத்து வைத்து கொள்ளவும் .
  2. பாஸ்மதி அரிசி வடித்து நன்றாக ஆறவைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, க.மிளகாய், கருவேப்பில்லை, முந்தரி பருப்பு போட்டு பொன்னிறமாக மாறிய பின் அதில் வெட்டி வைத்த கொடமிளகாய் போட்டு வதக்கவும்.
  4. கொடமிளகாய் வேகும்வரி வதக்கி அடுப்பை சிறு தீயில் வைத்து ,அதில் மஞ்சள் தூள்,அரைத்து வைத்த மசாலா தூளை,உப்பையும் போட்டு நன்கு கிளறவும்.
  5. பின்பு அதில் ஆறவைத்த சாதத்தை போட்டு கிளறி கொத்தமல்லி இலை தூவி சுவையான கொடமிளகாய் சாதம் ரெடி.




0 comments:

Post a Comment