Pages

பூரி கிழங்கு

தேவையான பொருட்கள் :

உருளைகிழங்கு - 2
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
கடுகு -1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1/4 ஸ்பூன்
சீரகம் -1/4 ஸ்பூன்
எண்ணெய்-2 ஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை :

  1. உருளைகிழங்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு , சீரகம் போட்டு பொரிந்ததும், கருவேப்பில்லை,வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  3. வதங்கியதும் உருளைகிழங்கு, மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  4. மஞ்சள் தூள் வாடை போனதும் இறக்கி பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment