Pages

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல்


தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
எண்ணெய் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - 2ஸ்பூன்
தயிர் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்

தாளிக்க தேவையானவை

க.மிளகாய் - 4 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிது

அரைக்கதேவையானவை :

க.மிளகாய் அல்லது மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
மிளகு - 1 1/2 ஸ்பூன்
முழு மல்லி அல்லது தனியா தூள் - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்


செய்முறை :
  1. சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.
  3. வாணலியில் மிளகு, சீரகம், க.மிளகாய், மல்லி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.
  4. வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட சிக்கனை ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
  6. மற்றொரு சிறிய கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு, பூண்டு, க.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  7. தாளித்தவற்றை சிக்கனுடன் சேர்த்து நன்கு ஒன்றாகும்படி கிளறி விடவும்.

0 comments:

Post a Comment