Pages

சிக்கன் மஞ்சுரியன்

தேவையான பொருட்கள் :

எலும்பு இல்லாத சிக்கன் - 250 கிராம் 
சோயா சாஸ் - 1 ஸ்பூன் 
வெங்காயம் (cube) வடிவில் வெட்டவும்  - 1
கார்ன் மாவு (corn flour)- 2 ஸ்பூன்
மைதா மாவு -4 ஸ்பூன் 
பூண்டு - 4 
கொடமிளகாய் (cube) வடிவில் வெட்டவும் -3
உப்பு - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் (tomato ketchup)- 2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
சில்லி சாஸ் - 2 ஸ்பூன் 
வெங்காய தாள் - 2 ஸ்பூன் 

செய்முறை:
  1. முதலில் கார்ன்மாவு, மைதாமாவு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும்  சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி அந்த மிக்ஸ் ல் பிரட்டி சூடான எண்ணெயில் வேகும் வரை பொரித்து எடுக்கவும்.
  3. பிறகு இன்னொரு கடாய் வைத்து அதில் 5 ஸ்பூன் எண்ணெய் உற்றவும்.
  4. அதில் வெங்காயம், சிறிதாக நறுக்கிய பூண்டு ,கொடமிளகாய் போட்டு வதக்கவும்.
  5. பாதி வதங்கியதும் அதனுடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ்,மிளகாய் தூள், சோயாசாஸ், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. கொதித்ததும் பொரித்து எடுத்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு 2 நிமிடம் கிளறவும். 
  7. சுவையான சிக்கன் மஞ்சுரியன் தயார், அதனை வெங்காயதால் சேர்த்து Fried rice உடன் பரிமாறவும். 




0 comments:

Post a Comment