Pages

வேர்கடலை சட்னி



தேவையான பொருட்கள் :
  1. வேர்க்கடலை - அரை கப்
  2. காய்ந்த மிளகாய் - 2
  3. புளி - சிறிய உருண்டை
  4. உப்பு - 1/2 ஸ்பூன்
  5. இஞ்சி - சிறிய துண்டு
  6. கடுகு- 1/4 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை- சிறிது
  8. எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:

  1. வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு :

மைக்ரோ வேவ் உள்ளவர்கள் வேர்கடலையை 2 நிமிடம் வைத்து  எடுத்தாலே கடாயில் வருக்க வேண்டியது இல்லை.
              

0 comments:

Post a Comment