Pages

முட்டை ஃப்ரைட் ரைஸ்



தேவையான பொருட்கள் :
  1. பாஸ்மதிசாதம் - 2 கப் (உதிரியாக)
  2. வெங்காயம் - 1
  3. கேரட் - 1
  4. பீன்ஸ் - 5
  5. முட்டை - 2
  6. முட்டைகோஸ் - 1/2 கப்
  7. சோயா சாஸ் - 1 ஸ்பூன்
  8. தக்காளி சாஸ் -1 ஸ்பூன்
  9. மல்லி இலை - சிறிது
  10. பச்சை மிளகாய் - 2
  11. பச்சை பட்டாணி - 1/4 கப்
  12. எண்ணெய் - 3ஸ்பூன்
  13. உப்பு - 1 ஸ்பூன்
  14. மிளகுதூள்- 1 ஸ்பூன் 
செய்முறை :
  1. வெங்காயம்,கேரட்,முட்டைகோஸ்,பீன்ஸை சிறிதாக அல்லது  நீளவாக்கில் வெட்டவும்.மிளகாயை சிறியதாக வெட்டவும்.
  2. முட்டையை ஒரு கப்பில் கலக்கி வைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.
  4. அதனுடன் கேரட்,முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் அளவு வதக்கவும்.
  5. வதங்கியதும் அதை ஒரு ஓரமாக கடாயில் ஒதுக்கிவிட்டு முட்டையை ஊற்றவும்.
  6. முட்டை வெந்தபின் அதை கொத்திவிட்டு அதில் பட்டாணி,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  7. பின்பு அதில் தக்காளிசாஸ்,சோயா சாஸ்,உப்பு சேர்த்து கலக்கவும்.இதில் உதிரியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு மிளகுதூள் தூவி பிரட்டி எடுக்கவும்.சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.

குறிப்பு


சிக்கன்ஃப்ரைட் ரைஸ் அல்லது இறால்ஃப்ரைட்ரைஸ் வேண்டுமென்றால் அதில் சிக்கன் அல்லது இறால் துண்டுகளை பொரித்து சேர்த்து கிளறவும்.

ரவாகிச்சடி

 தேவையான பொருட்கள் :


  • ரவா - 2 கப்
  • வெங்காயம் - 1
  • கேரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கியது - 1 கப்
  • பச்சை பட்டாணி - 1/4 கப்
  • இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • கிராம்பு, பட்டை.பிரிஞ்சி இலை- 2
  • பச்சைமிளகாய் - 3
  • எண்ணெய் - 3 ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
  • சோம்பு - 1/4 ஸ்பூன்
செய்முறை :

  1. கடாயில் எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை தாளிக்கவும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட்,தக்காளி, காய்கறி சேர்த்து வதக்கவும்.

  2. ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் அளந்து அத்துடன் சேர்த்து கொதிக்கவைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.

  3. ரவையை கொட்டி கிளறவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தூவி கிளறவும்.

  4. சுவையான கிச்சடியை சட்னியுடன் பறிமாறவும்.
குறிப்பு:
ரவை கொட்டி கிளரும் போது சிறுதீயில் வைத்து சமைக்கவும்.

ரவா உப்புமா

தேவையான பொருட்கள்:

  1. ரவை - 2 கப்
  2. பச்சைமிளகாய் - 3
  3. வெங்காயம் -1
  4. கருவேப்பிலை -சிறிது
  5. கடுகு-1/2 ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  7. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
  8. உப்பு - 1 ஸ்பூன்
  9. எண்ணெய்- 3 ஸ்பூன்

செய்முறை:

  1. முதலில் கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு பொரிந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் உற்றி கொதிவந்ததும் உப்பு சேர்த்து ரவை போட்டு கிளறவும்.
  3. அடுப்பின் தீயை குறைத்து மூடிவைத்து வேகவிடவும். சூடான உப்புமா ரெடி.
குறிப்பு : உப்புமா உதிரியாக வேண்டும் என்றால் தண்ணீர் 1 கப் ஊற்றவும்.

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள் :

  • உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  • கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
  • இஞ்சி -சிறிது
  • க.மிளகாய் - 4
  • கறிவேப்பிலை - சிறிது
  • முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை : 


  1. எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு  சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், இஞ்சி, க.மிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை,தேங்காய் துருவல் சேர்த்து ஒரே ஒரு நிமிடம் வதக்கவும்.

  2. எதுவும் நிறம் மாற தேவையில்லை. பிறகு தீயை அணைத்து விட்டு உடன் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள் : 


  • நெய் - 2 ஸ்பூன்
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • பாசுமதி அரிசி - 1 1/2 கப்
  • சோம்பு -1/2 கப்
  • பட்டை, ஏலக்காய் - 3
  • வெங்காயம் - 1
  • மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்'
  • கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • இஞ்சி,பூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிது 

  • பீஸ், கேரட், பீன்ஸ்,உருளைகிழங்கு பொடியாக நறுக்கியது - 1 கப்

செய்முறை : 


  1. அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து விடவும். எண்ணெய் ,நெய்யை காயவைத்து சோம்பு, பட்டை, ஏலம் போட்டு பொரிய விட்டு, பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. இளம் பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும். காய்கறிகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி.மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. கொதித்ததும் அரிசியை போட்டு 2 விசில் விடவும்.
  5. சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி.
குறிப்பு :

இதே முறையில் Electric cooker ல் செய்யலாம்.

 

பொங்கல்

தேவையான பொருட்கள்:


  • பச்சரிசி -2 கப்
  • பாசிபருப்பு -3/4 கப்
  • இஞ்சி- சிறிது
  • சீரகம் -1/2 ஸ்பூன்
  • மிளகு -1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை- சிறிது
  • நெய்-3 ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிது
  • முந்தரி பருப்பு - 10
செய்முறை : 


  1. அரிசியையும் பாசிபருப்பையும் நன்றாக அலசி குக்கரில் 5 கப் தண்ணீரில் உப்பு சேர்த்து 4 விசில் வர வரை வேகவைக்கவும்.


  2. கடாயில் நெய் ஊற்றி அதில் சீரகம், மிளகு சேர்த்து கருவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும், பின்பு முந்தரி பருப்பு வதக்கவும்.


  3. பொங்கல் நன்றாக குலைந்து வந்து இருக்கும் அதனுடன் தாளித்தவற்றை சேர்த்து கிளறவும்.


  4. பொங்கல் ரெடி ..சாம்பார்,வடையுடன் பரிமாறவும்.



வாங்கி பாத்

தேவையான பொருட்கள் :


  1. எண்ணெய் - 2 ஸ்பூன்
  2. கடுகு - 1 ஸ்பூன்
  3. பெருங்காயம் - சிறிதளவு
  4. கறிவேப்பிலை - சிறிது
  5. உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  6. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
  7. நீளமான பச்சை கத்தரிக்காய் - 250 கிராம்
  8. வடித்த சாதம் - 3 கப்
  9. உப்பு - 1 ஸ்பூன்
 
வறுத்து அரைக்க:

  1. சீரகம் - 1 ஸ்பூன்
  2. பட்டை -2
  3. கிராம்பு -2
  4. எள்ளு - 2 ஸ்பூன்
  5. கசகசா -1 ஸ்பூன்
  6. தனியா - 2 ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் - 4
  8. உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
  9. கடலை பருப்பு -1 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

செய்முறை : 

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு.
  3. அதில் கடைசியில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
  4. கத்தரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.
  5. ஆறிய உதிரியான சாதத்துடன் இந்த கலவையை போட்டு நன்கு பிரட்டினால் சுவையான வாங்கி பாத் ரெடி.


கேரட் சாதம்

தேவையான பொருட்கள் :
  1. துருவிய கேரட் - ஒரு கப்
  2. பச்சை மிளகாய் -3
  3. வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது 
  5. கடுகு - 1/2 ஸ்பூன்

  6. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  7. உப்பு - 1 ஸ்பூன்
  8. வடித்தசாதம் - 3 கப்
 செய்முறை :



  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும்.
  2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் துருவிய கேரட்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வெந்ததும் சாதம்,கொத்தமல்லி தூவி கிளறவும்.

தக்காளி சாதம்

 தேவையான பொருட்கள் :
  1. தக்காளி - 2
  2. வெங்காயம் -1
  3. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

  4. தனியா தூள் -1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  6. உப்பு - 1 ஸ்பூன்
  7. எண்ணெய் - 3 ஸ்பூன்

  8. பச்சை மிளகாய் - 2
  9. கடுகு - 1 ஸ்பூன்
  10. உள்ளுதம்பருப்பு - 1/4 ஸ்பூன்
  11. கடலைபருப்பு - 1/4 ஸ்பூன்
  12. சீரகம் - 1/4 ஸ்பூன்

  13. பூண்டு - 4
  14. சாதம் - 2 கப்

செய்முறை:
  1. முதலில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உள்ளுதமப்ருப்பு,கடலை பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் அரை கப் தண்ணீர் உற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  4. அதனுடன் வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.

தேங்காய்பால் சாதம்

தேவையான பொருட்கள்:
  1. பாசுமதி அரிசி - 2 கப்
  2. தேங்காய் பால் - 2 கப்
  3. தண்ணீர் - 1 1/2 கப்
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. பச்சை மிளகாய் - 3
  7. இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
  8. பட்டை - 1
  9. கிராம்பு - 3
  10. பிரிஞ்சி இலை - 2
  11. சோம்பு - 1/4  ஸ்பூன்
  12. சீரகம் - 1/4  ஸ்பூன்
  13. கரம் மசாலா - 1 ஸ்பூன்
  14. கறிவேப்பிலை - சிறிதளவு
  15. எண்ணெய் - 3 ஸ்பூன்
  16. உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை :

  1. முதலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம் போட்டு பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  2. அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  3. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  4. அதனுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.
  5. இப்போது பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து பின்னர் இறக்கி விடவும்.
  6. சுவையான ஈசி தேங்காய் பால் சாதம் ரெடி.



முட்டை பிரியாணி

தேவையான பொருட்கள் :


  1. முட்டை - 4
  2. பாஸ்மதிஅரிசி-3 கப்
  3. பட்டை -2
  4. கிராம்பு -2
  5. பிரிஞ்சி இலை -2
  6. ஏலக்காய் -2
  7. பச்சை மிளகாய் -2
  8. பூண்டு - 10 பல்
  9. இஞ்சி - சிறிது
  10. வெங்காயம்-3
  11. புதினா - 1/4 கப்
  12. கொத்தமல்லி -1/4 கப்
  13. தக்காளி - 2
  14. எண்ணெய் - 6 ஸ்பூன்
  15. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
  16. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  17. மிளகாய் தூள் - 2ஸ்பூன்
  18. தனியா தூள் - 1ஸ்பூன்
  19. பிரியாணி மசாலா -2 ஸ்பூன்
  20. உப்பு - 2 ஸ்பூன்
  21. கேசரி கலர் பொடி - சிறிது
  22. நெய் - 2 ஸ்பூன்


செய்முறை
  1. முதலில் ஒரு பேனில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை மற்றும்ஏலக்காய் போட்டு வதக்கவும்.பின்பு பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
  2. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.அதில் வெட்டிவைத்த தக்காளி துண்டுகளை சேர்க்கவும்.
  3. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் , பிரியாணி மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வேகவைத்த  முட்டை இரண்டு துண்டுகளாக போட்டு நன்கு கிளறவும். அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கிளறி வைக்கவும்.
  4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒருபட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை,ஏலக்காய், உப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அதில் அரை மணி நேரம் உர வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை வடித்து கொள்ளவும். 
  5. கிளறி வைத்த முட்டை மசாலா மேல்வடித்த பாஸ்மதி அரிசியை போட்டு. கிளறாமல் அரிசி மேல் கேசரி கலர் பொடி அரை தேக்கரண்டி தண்ணீருடன் சேர்த்து ஊற்றி விடவும். அதன் மேல் நெய் ஊற்றி Aluminium Foil sheet போட்டு மூடி வைக்கவும்.
  6. அடுப்பில் ஒரு தவா வைத்து அதை நன்றாக சூடு செய்யவும், பின்பு அதன் மேல் அந்த பிரியாணி Pan வைத்து அடுப்பை சிம் செய்யவும். அரை மணி நேரம் களித்து மேலே கொத்தமல்லி இலை தூவி நன்கு கிளறி தயிர் பச்சடி, பிரியாணி கத்திரிக்காயுடன் பரிமாறவும்.