Pages

இறால் தம் பிரியாணி

தேவையான பொருட்கள் :

  1. பாஸ்மதிஅரிசி - 2 கப்
  2. இறால் - 11/2கப்
  3. தக்காளி - 1
  4. வெங்காயம் - 2
  5. பச்சை மிளகாய் - 4
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
  9. தனியாதூள் - 1 ஸ்பூன்
  10. பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
  11. எண்ணெய் - 4 ஸ்பூன்
  12. நெய் -2 ஸ்பூன்
  13. பட்டை - 1
  14. கிராம்பு - 2
  15. பிரிஞ்சிஇலை - 2
  16. ஏலக்காய் - 2
  17. உப்பு - 2 ஸ்பூன்
  18. புதினா -சிறிது
  19. கொத்தமல்லி - சிறிது
  20. கருவேப்பிலை - சிறிது

செய்முறை :

  1. பாத்திரத்தில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலை போட்டு கிளறவும்.
  2. பொரிந்ததும் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. அதில் இறால் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் உற்றி வேக விடவும்.
  6. வெந்து எண்ணெய் மேலே வந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டுதட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து தம்மில் வைக்கவும்.
  7. 20நிமிடம் களித்து நெய் மேலே உற்றி கிளறி பரிமாறவும். சுவையான இறால் பிரியாணி ரெடி.

வாழைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :

  1. வாழைக்காய் - 2
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
  4. கடலை பருப்பு -1/4 ஸ்பூன்
  5. கருவேப்பிலை - சிறிது
  6. க.மிளகாய் - 3
  7. உப்பு - 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. எண்ணெய் - 2 ஸ்பூன்
  11. தேங்காய் துருவல்- சிறிது

செய்முறை :

  1. வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. கடாயில் எண்ணை விட்டு கடுகு,கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் சிறிதாக வெட்டிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. வதங்கியதும் வாழைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து சிம்மில் மூடி போட்டு வேகவிடவும்.
  4. வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும், வாழைக்காய் பொரியல் ரெடி.


கத்திரிக்காய் தொக்கு

தேவையான பொருட்கள் :

  1. கத்தரிக்காய் - 6
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. உப்பு-1 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  7. கரம்மசாலா-1 /2 ஸ்பூன்
  8. பூண்டு - 2 பல்
  9. சோம்பு-1 ஸ்பூன்
  10. எண்ணெய் - 3 ஸ்பூன்
  11. கருவேப்பிலை -சிறிது
  12. கொத்தமல்லி இலை-சிறிது

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை,சோம்பு தாளித்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் நீளவாக்கில் வெட்டிய கத்தரிகாயை சேர்த்து வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள்,கரம்மசாலா , மிளகாய்த்தூள், உப்பு, சிறிதுதண்ணீர்சேர்த்து  கிளறிமூடி வைக்கவும்.
  4. நன்கு வெந்துஎண்ணெய் பிரியும் வரை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.
  5. சுவையான கத்திரிக்காய் தொக்கு ரெடி.

சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள் :

  1. பரோட்டா - 5
  2. வெங்காயம் - 2 
  3. கொடமிளகாய் - 2
  4. சில்லிசாஸ் - 1 ஸ்பூன்
  5. தக்காளி சாஸ் -1ஸ்பூன்
  6. சோயாசாஸ் -1/ 2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் -1ஸ்பூன்
  8. உப்பு -1ஸ்பூன்
  9. எண்ணெய் -4 ஸ்பூன்
  10. கொத்தமல்லி-சிறிது


செய்முறை :

  1. முதலில்பரோட்டா சமைத்து அதை Cube வடிவில் வெட்டி கொள்ளவும்.
  2. ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் உற்றி சூடேறியதும் வெங்காயம், கொடமிளகாய் போட்டு வதக்கவும்.
  3. பாதி வதங்கியதும் சில்லிசாஸ்,தக்காளி சாஸ்,சோயாசாஸ், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
  4. அதனுடன் சிறிது தண்ணீர் உற்றி கிளறவும். வெங்காயம், கொடமிளகாய் வெந்ததும் அதனுடன் வெட்டி வைத்த பரோட்டா சேர்த்து கிளறி கொத்தமல்லி போட்டு தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

கோவக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :
  1. கோவக்காய் - 1/4 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 3 பல்
  4. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  6. தனியா தூள் - 1/2 ஸ்பூன்
  7. எண்ணெய் - 2 ஸ்பூன்
  8. உப்பு - 1 ஸ்பூன்
  9. கடுகு - 1/4 ஸ்பூன்
  10. கருவேப்பிலை - சிறிது
  11. மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :

  1. கோவக்காய், வெங்காயம் சிறிதாக வெட்டிவைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு ,கருவேப்பில்லை போட்டு பொரிந்ததும் அதில் வெட்டிவைத்த வெங்காயம், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் அதில் கோவக்காய் சேர்த்து நன்கு வதக்கவும், பாதி வெந்ததும் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின் சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.
  4. வெந்ததும் மிளகு தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு வறுவல்


    தேவையான பொருட்கள் :
    1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
    2. கடுகு - 1 ஸ்பூன்
    3. உள்ளுதம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    4. சோம்பு - 1/4 ஸ்பூன்
    5. பூண்டு - 6 பல்
    6. இஞ்சி - சிறிது
    7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    8. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    9. தனியாதூள் - 1 ஸ்பூன்
    10. கருவேப்பிலை - சிறிது
    11. உப்பு - 1 ஸ்பூன்
    12. எண்ணெய் - 4 ஸ்பூன்
    செய்முறை :

    1. உருளைக்கிழங்கை வேகவைத்து நறுக்கி வைக்கவும்.
    2. பூண்டு, இஞ்சி, சோம்பு அரைத்து வைக்கவும்.
    3. கடாயில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உள்ளுதம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு, சோம்பு போட்டு வதக்கவும்.
    4. பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
    5. உருளைக்கிழங்கு நன்கு சிறு தீயில் வைத்து வறுக்கவும்.
    6. சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.



    அவரைக்காய் வறுவல்


    தேவையான பொருட்கள் :
    1. அவரைக்காய் - 1/4 கிலோ
    2. வெங்காயம் - 1
    3. மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
    4. தனியாதூள் - 1/2 ஸ்பூன்
    5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    6. எண்ணெய் - 2 ஸ்பூன்
    7. கடுகு - 1/4 ஸ்பூன்
    8. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    9. பூண்டு - 3 பல்
    10. கருவேப்பிலை - சிறிது
    11. உப்பு - 1 ஸ்பூன்
    செய்முறை :

    1. அவரைக்காய், வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு  பொரிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் அவரைக்காய் ,உப்பு சேர்த்து வதக்கி,பின்  மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள் சேர்த்து வதக்கி தீயை குறைத்து மூடி வேகவைக்கவும்.
    4. வெந்ததும் சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.

    பீன்ஸ் பொரியல்

    தேவையான பொருட்கள் :
    1. பீன்ஸ் - 1/4 கிலோ
    2. வெங்காயம் - 1
    3. காய்ந்த மிளகாய் - 2
    4. எண்ணெய் - 2 ஸ்பூன்
    5. கடுகு - 1/4 ஸ்பூன்
    6. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    7. கருவேப்பிலை - சிறிது
    8. தேங்காய் பூ- 1/4 கப்
    9. உப்பு - 1 ஸ்பூன்
    செய்முறை :


    1. பீன்ஸ், வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு,காய்ந்த மிளகாய் போடவும் பொரிந்ததும் கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ்,உப்பு சேர்த்து வதக்கி தீயை குறைத்து மூடி வேகவைக்கவும்.
    4. வெந்ததும் தேங்காய் பூ சேர்த்து இறக்கவும்.சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி.

    இடியாப்பம்

    தேவையான பொருட்கள் :


    1. அரிசி மாவு - 2 கப்
    2. தண்ணீர் - 2 1/2 கப்
    3. உப்பு - 1 ஸ்பூன்
    செய்முறை :

    1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிடவும் , பின் அதை அரிசி மாவில் சேர்த்து நன்கு கட்டிபடாமல் கிளறவும்.
    2. பின் இடியாப்பம் பிழியும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் கிளறிய மாவை அதில் போட்டு இட்லி பாத்திரத்தில் பிழியவும்.
    3. பிழிந்த இடியாப்பத்தை இட்லி மூடி போட்டு நன்கு வேகவிடவும்.
    4. பின் சூடான இடியாப்பத்தை குருமா அல்லது தேங்காய் பால்,சர்க்கரை  சேர்த்து பரிமாறவும்.

    தேங்காய் சட்னி

    தேவையான பொருட்கள் :

    1. தேங்காய் - 1 கப்
    2. பச்சை மிளகாய் - 4
    3. பொட்டுகடலை - 1/2 கப்
    4. கடுகு - 1/4 ஸ்பூன்
    5. உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
    6. கருவேப்பில்லை - சிறிது
    7. உப்பு - 1/2 ஸ்பூன்
    8. எண்ணெய் - 1/2 ஸ்பூன்

    செய்முறை :

    1. முதலில் தேங்காய், பச்சைமிளகாய், பொட்டுகடலை, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
    2. பின் ஒரு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

    செட்டிநாடு மட்டன் குழம்பு

    தேவையான  பொருட்கள் : 


    1. மட்டன் - அரை கிலோ
    2. வெங்காயம் - 1
    3. தக்காளி - 1
    4. மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
    5. மிளகாய் பொடி - 2ஸ்பூன்
    6. தனியா பொடி - 3ஸ்பூன்
    7. பட்டை - 2
    8. கிராம்பு - 1
    9. சோம்பு - 1/2ஸ்பூன்
    10. வெந்தயம் - 1/2ஸ்பூன்
    11. கருவேப்பில்லை- சிறிது
    12. எண்ணெய் - 4 ஸ்பூன்


    அரைக்க தேவையானவை :


    1. மிளகு - 1ஸ்பூன்
    2. சீரகம் - 1ஸ்பூன்
    3. சோம்பு - 1ஸ்பூன்
    4. பூண்டு - 6 பல்
    5. இஞ்சி - ஒரு துண்டு
    6. உப்பு - 2 ஸ்பூன்


    செய்முறை :

    1. ஒரு குக்கரில் மட்டன் சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், தண்ணீர் உற்றி 5 விசில் விடவும்.
    2. ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
    3. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, வெந்தயம், கருவேப்பில்லை சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
    4. சிறிது வதக்கி பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த மட்டன் போட்டு நன்கு கொதிக்க விடவும். 
    5. குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.