Pages

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள் :

  1. துருவிய பீட்ரூட் - 1 கப்

  2. பால் - 2 கப்

  3. சர்க்கரை - 1/2 கப்

  4. நெய் - 4 ஸ்பூன்

  5. முந்திரி - 8
  6. ஏலக்காய் - 2 

செய்முறை :

  1. ஒரு பாத்திரத்தில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடவும்.

  2. பீட்ரூட் வெந்ததும் பால் வற்றும் வரை கிளறவும்.

  3. பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

  4. அல்வா பதம் வர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

  5. பின் முந்தரி பருப்பு வறுத்து அதனுடன் சேர்க்கவும்.
  6. ஏலக்காய் பொடி செய்து சேர்த்து கிளறி பரிமாறவும்.

புட்டு

தேவையான பொருட்கள் :

  1. அரிசி மாவு - 2 கப்

  2. சர்க்கரை - 1 கப்

  3. ஏலக்காய் - 2

  4. துருவிய தேங்காய் - 1 கப்

  5. உப்பு - சிறிது
  6. நெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

  1. அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறவும். 
  2. மாவு லேசாக ஈரப்பதத்துடன் உருண்டு வரும் போது குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி மாவை உதிர்த்து விட்டு கிளறி விடவும்.
  3. வேக வைத்த மாவுடன் சர்க்கரை , தேங்காய் துருவல், ஏலக்காய் , நெய் சேர்த்து கிளறி விடவும். 
  4. சுவையான புட்டு ரெடி. 

அடை

தேவையான பொருட்கள் :

  1. அரிசி - 1 கப்
  2. உளுத்தம் பருப்பு -1/4 கப்
  3. கடலை பருப்பு - 1/2 கப்
  4. துவரம் பருப்பு - 1/4 கப்
  5. க.மிளகாய் - 6
  6. சோம்பு - 1/4 ஸ்பூன்
  7. உப்பு - 2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
தாளிக்க :
  1. துருவிய தேங்காய் -3 ஸ்பூன்
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
  4. உள்ளுதம் பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை :

  1. 2 மணி நேரம் உறவைத்த அரிசி,பருப்பை க.மிளகாய்,மஞ்சள் தூள், சோம்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம் பருப்பு , கடலை பருப்பு ,  துருவிய தேங்காய் வறுத்து மாவுடன் சேர்த்து கிளறவும்.
  3. தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

புளியோதரை

தேவையான பொருட்கள்:

  1. சாதம் - 2 கப்
  2. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  3. கருவேப்பில்லை- சிறிது
  4. உப்பு - 2 ஸ்பூன்
  5. புளி - 1 கப் கரைத்தது
  6. வேர்கடலை -1 ஸ்பூன்
  7. கடுகு - 1/4 ஸ்பூன்
  8. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 4 ஸ்பூன்
வறுத்து அரைக்க :
  1. சீரகம் - 1/2 ஸ்பூன்
  2. கடலை பருப்பு - 2 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
  4. மிளகு - 1/2 ஸ்பூன்
  5. தனியா - 1/2 ஸ்பூன்
  6. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  7. க.மிளகாய் - 8

செய்முறை: 
  1. வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவிடவும். ஆறியதும் பொடியாகி கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு கருவேப்பில்லை, க.மிளகாய், வேர்கடலை சேர்த்து பொரிந்ததும்அதில் கரைத்த புளி தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  3. நன்கு கொதித்ததும் அரைத்த பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. பின் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

சக்கரை பொங்கல்

தேவையான பொருட்கள் :

  1. பச்சரிசி  - 1 கப்
  2. சிறுபருப்பு - 1/4 கப் 

  3. வெள்ளம் - 1 1/2 கப்

  4. முந்திரி -10

  5. திராட்சை- 8

  6. நெய் - 5 ஸ்பூன்

  7. ஏலக்காய் - 4

  8. உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :


  1. cookerல் அரிசி,பருப்பு போட்டு 2 கப் தண்ணீர் உற்றி 5 விசில் விடவும்.

  2. ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் உற்றி நுணுக்கிய வெள்ளம் போட்டு கொதிக்க விடவும்.
  3. கொதித்ததும் அதை எடுத்து வெந்த சாதத்துடன் சேர்த்து, ஏலகாய் போட்டு  நன்கு கிளறவும்.

  4. கடாயில் நெய் உற்றி காய்ந்ததும் முந்திரி ,திராட்சையை சேர்த்து வறுத்து அதை கிளறிய சாதத்துடன் போட்டு சூடாக பரிமாறவும்.