Pages

ஃப்ரெஞ்சு டோஸ்ட்

தேவையான பொருட்கள் :
  1. ப்ரெட் துண்டுகள் - 4
  2. முட்டை - 2
  3. பால் - 1/2 கப்
  4. வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
  5. தேன் -3 ஸ்பூன்
  6. வெண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

  1. முட்டைகளை நன்கு அடித்து, அதனுடன் பால், தேன் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், ப்ரெட் துண்டை கலந்து வைத்துள்ள கலவையில் இரு பக்கங்களையும் தோய்த்து எடுக்கவும்.
  3. தவாவில் வெண்ணெய் தடவி, ப்ரெட் துண்டை போட்டு டோஸ்ட் செய்யவும்.
  4. சிவந்ததும் மறு புறமும் டோஸ்ட் செய்து கொள்ளவும்.


குறிப்பு :

       ப்ரெட்அதிக நேரம் Dip பண்ணகூடாது, ப்ரெட் ஊறிவிடும்.ஃப்ரெஞ்சு டோஸ்ட்பண்ணும் போது ப்ரெட்தேவையான வடிவில் கட் செய்யவும். தேனுக்கு பதில் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.

ஸ்வீட் புளி சட்னி


தேவையான பொருட்கள்:
  1. புளி - 1 (லெமன் அளவு)
  2. வெல்லம் - 1/2 கப்
  3. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  4. சீரக தூள் - 1/4 ஸ்பூன்
  5. உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை :
  1. புளியை முதலில் 1 கப் சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிடவும்.
  2. ஒரு பாத்திரத்தில் புளி கரைச்சல், வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. 5 நிமிடம் கொதித்ததும் மிளகாய்த்தூள், சீரக தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிடவும். அது நன்கு கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஸ்வீட் புளி சட்னி ரெடி. இதை எல்லா சாட் உணவுடன் சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு :

இந்த புலி சட்னி Fridge ல் வைத்து ஒரு மாதம் வரை சாபிடலாம்.

பேல் பூரி

தேவையான பொருட்கள் :

  1. பொறி - 2 கப்
  2. நறுக்கிய தக்காளி - 1/2 கப்
  3. நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
  4. கொத்தமல்லி -1/4 கப்
  5. வேகவைத்த உருளைக்கிழங்கு -1/2 கப்
  6. நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
  7. பச்சைமிளகாய் -2
  8. புளி சட்னி - 2 ஸ்பூன்
  9. புதினா சட்னி - 2 ஸ்பூன்
  10. லெமன் ஜூஸ்-1 ஸ்பூன்
  11. சேவ்- 1/2 கப்
  12. தட்டை- 5
  13. மிளகாய் தூள் -சிறிது (Pinch)
  14. சாட் மசாலா -சிறிது
  15. கரம் மசாலா - சிறிது

செய்முறை :
  1. ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன பொருட்களில் புளி சட்னி, புதினா சட்னியை தவிர அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.
  2. பின் அதில் இனிப்பு புளி சட்னி, புதினா சட்னியை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு :


         பேல் பூரியை செய்த உடனேயே சாபிட்டால் நன்றாக இருக்கும். புளி சட்னி, புதினா சட்னி செய்முறையை சட்னி பகுதியில் பார்க்கலாம்.

சாட் கிரீன் சட்னி

தேவையான பொருட்கள் :
  1. கொத்தமல்லி - 1 கப்
  2. புதினா - 1/2 கப்
  3. தேங்காய் துருவல் - 1/2 கப்
  4. பச்சைமிளகாய் - 2
  5. லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
  6. உப்பு - 1/2 ஸ்பூன்
  7. சக்கரை - 1/2 ஸ்பூன்

செய்முறை :

  1. புதினா, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், உப்பு, சக்கரை,தேங்காய் துருவல்,லெமன் ஜூஸ்,தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில் நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. சாட் கிரீன் சட்னி ரெடி. சாட் உணவுடன் பரிமாறவும்.


மிளகு சாதம்

தேவையான பொருட்கள் :


  1. வெங்காயம் - 1
  2. பச்சைமிளகாய் - 2
  3. கருவேப்பிலை - சிறிது
  4. கடுகு - 1/4 ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு -1/2 ஸ்பூன்
  6. மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
  7. சாதம் - 2 கப்
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  9. உப்பு - 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

  1. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள்,மிளகுதூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  3. பின் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறினால் சுவையான மிளகு சாதம் ரெடி.

வாழைப்பூ வடை

வாழை பூக்கள் வைட்டமின் E, உணவு இழைகள் (Dietary fiber), புரதங்கள் (protein) மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acid) உள்ளன.
 
தேவையான பொருட்கள் :

  1. நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
  2. கடலைப்பருப்பு – 2 கப்
  3. சோம்பு – 1/2 ஸ்பூன்
  4. பச்சைமிளகாய் – 4
  5. வெங்காயம் – 1
  6. உப்பு - 1 ஸ்பூன்
  7. எண்ணெய் - வடை பொரிப்பதற்கு 

 செய்முறை :

  1. கடலைப்பருப்பை இரண்டு  மணி நேரம் ஊற வைத்து சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  2. இதனுடன் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  3. அரைத்த கலவையுடன் வெங்காயம்,பச்சைமிளகாய் , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. எண்ணெயை காய வைத்து மாவை வடையாகத் தட்டி, பொரித்தெடுக்கவும்.
 குறிப்பு :

       வாழைப்பூ நறுக்கிய உடனே கருகாமல் இருக்க மோரில் போட்டு வைக்கவும்.