Pages

அப்பள கூட்டு


தேவையான பொருட்கள் :
  1. உருளைகிழங்கு - 2
  2. அப்பளம் - 8
  3. கடலைபருப்பு - 1 / 2 கப்
  4. கடுகு - 1/4 ஸ்பூன்
  5. சீரகம் - 1/4 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  8. தனியாதூள் - 1/2 ஸ்பூன்
  9. உப்பு - 1 ஸ்பூன்
  10. வெங்காயம் - 1
  11. தக்காளி - 1
  12. பூண்டு - 3 பல்
  13. கருவேப்பிலை - சிறிது
  14. எண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை :

  1. ஒரு pressure cooker ரில் கடலை பருப்பு, உருளைகிழங்கு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் உற்றி இரண்டு விசில் விடவும்.
  2. கடாயில் எண்ணெய் வைத்து அப்பளத்தை பொரித்து வைக்கவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு பொரிந்ததும், வெங்காயம், பூண்டு சேர்த்து  வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்,உப்பு சேர்த்து கிளறவும். பின் அதில் வேகவைத்த கடலைபருப்பு வேகவைத்த தண்ணீருடன் , வெந்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த அப்பளம் உடைத்து அத்துடன் சேர்த்து கிளறி பரிமாறவும். காரக்குழம்பு சாதத்துடன் அருமையாக இருக்கும்.
குறிப்பு:

அப்பளத்தை எண்ணெயில் பொரிக்காமல், Microwave வில் 5 அப்பளம் வைத்து 1 நிமிடம் வைத்து எடுத்தாலும் நன்றாக இருக்கும்.

0 comments:

Post a Comment