Pages

பொரிச்ச குழம்பு

தேவையான பொருட்கள் :

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி -1
  3. பச்சைமிளகாய்- 1
  4. பூண்டு - 2 பல்
  5. கருவேப்பிலை- சிறிது
  6. உருளைக்கிழங்கு- 2
  7. எண்ணெய் - 2 ஸ்பூன்
  8. கடுகு - 1/4 ஸ்பூன்
  9. சீரகம் -1/4 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
  12. தனியாதூள் - 1/2 ஸ்பூன்
  13. உப்பு -1 ஸ்பூன்
  14. கொத்தமல்லி - சிறிது
  15. தேங்காய் துருவல் -1/2 கப்

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் , கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி நன்கு வதங்கியதும் தோல் நீக்கி சிறிய cube வடிவில் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  4. 2 நிமிடம் வதக்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாதூள் , உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதில் 1 கப் தண்ணீர் உற்றி உருளைகிழங்கை வேக விடவும்.
  6. உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. உருளைக்கிழங்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.


குறிப்பு :

பொரிச்ச குழம்பில் உருளைக்கிழங்கு பதில் கத்திரிக்காய்,முருங்கைக்காய் அல்லது வாழைக்காய் சேர்த்தும் சமைக்கலாம்.

0 comments:

Post a Comment