Pages

பூர்ண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
  2. எள் - 2 கப்
  3. வேர்க்கடலை - 2 கப்
  4. தேங்காய் துருவியது - 1 கப் 
  5. ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
  6. வெல்லம் - 1 கப்
  7. உப்பு - சிறிது
பூர்ணம் செய்முறை:
  1. ஒரு கடாயில் சிறு தீயில் வேர்க்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  2. வெல்லத்தை நன்கு இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். 
  3. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேங்காயை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்முறை:
  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவர் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக வட்டவடிவில் தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.
  4. பூர்ண கொழுக்கட்டை ரெடி.

1 comments:

Anonymous said...

Thank you so much.I am very happy. This is the first time I am going to prepare it. Your method is so super. It is going to be very tasty. I am sure about it. Thank you mam.

Post a Comment