Pages

வெங்காய சமோசா

குட்டீஸ் முதல் பெரியோர் வரை நம் கிட்செனில் வெங்காய சமோசா சமைத்தால். ரெடியா சமோசா சமைக்க, வாங்க போலாம் கிட்செனுக்கு.

தேவையான பொருட்கள்:
  1. மைதா மாவு - 1 கப்
  2. கோதுமைமாவு-1 கப்
  3. வெங்காயம்-1
  4. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
  5. உப்பு-1 ஸ்பூன்
  6. அவல் - 1/4 கப்
  7. எண்ணெய்- பொரிக்க
செய்முறை:
  1. முதலில் மைதாமாவு,கோதுமைமாவு,1/2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல பிசையவும்.
  2. பின் அதை அரை மணி நேரம் ஊறவிடவும்.
  3. பாத்திரத்தில் மெலிதாக நீளவாக்கில் வெட்டிவைத்த வெங்காயம்,உப்பு, மிளகாய்த்தூள்,அவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.( அடுப்பில் வைத்து சமைக்க தேவையில்லை).
  4. பிசைந்து வைத்த மாவை எடுத்து நன்கு திரட்டி கொள்ளவும்.
  5. அதை சமோசா வடிவில் Cone போல செய்து அதன் உள்ளே மசாலாவை வைத்து மூடவும்.
  6. அனைத்தையும் சமோசா வடிவில்,உள்ளே மசாலா வைத்து ரெடி செய்து கொள்ளவும்.
  7. பின் கடாயில் எண்ணெய் வைத்து நன்கு சூடேறியதும் சமோசாவை போட்டு மிதமான தீயில் நன்கு சிவக்க பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:

அவல் சேர்ப்பதால் வெங்காயத்தில் இருந்து வரும் தண்ணீர் பதத்தை அது உறிஞ்சிகொள்ளும். ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் மைதா சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து, அதை சமோசாவை மசாலா வைத்து மூடும் போது பேஸ்ட் போல ஓரத்தில் தடவி ஒட்டவும்.அது சமோசா பிரிந்து வராமல் இருக்க உதவும்.

வெட்ஜ் புலாவ்

தேவையான பொருட்கள்:
  1. வெங்காயம்- 1
  2. தக்காளி- 1
  3. இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
  4. பாஸ்மதி அரிசி- 1 1/2 கப்
  5. பச்சைமிளகாய்- 3
  6. மிளகாய்த்தூள்- 1/2 ஸ்பூன்
  7. கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
  8. பட்டை-2
  9. கிராம்பு-2
  10. பிரியாணிஇலை-2
  11. ஏலக்காய்-2
  12. கேரட்-1
  13. பீன்ஸ்-8
  14. உருளைக்கிழங்கு-1
  15. பச்சைபட்டாணி -1/2 கப்
  16. புதினா-1/4 கப்
  17. கொத்தமல்லி-1/4 கப்
  18. தயிர்-4 ஸ்பூன்
  19. எண்ணெய்-4 ஸ்பூன்
  20. நெய்-1 ஸ்பூன்
செய்முறை:
  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணிஇலை சேர்த்து பொரிந்ததும், நீளவாக்கில் வெட்டிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
  4. அதில் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
  5. தக்காளி வதங்கியதும் வெட்டி வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்.
  6. காய் பாதி வெந்ததும் மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
  7. பின் அதில் தயிர் சேர்த்து வதக்கி,3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
  8. கொதிவந்ததும் அதை Electric rice cooker ல் ஊற்றி,நெய்,அரை மணி நேரம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து வேகவிடவும். வெட்ஜ் புலாவ் ரெடி, குருமா அல்லது ரைத்தாவுடன் பரிமாறவும்.

கத்திரிக்காய் கொத்சு

தேவையான பொருட்கள்:

    1. கத்தரிக்காய் - 3
    2. பாசி பருப்பு - 1/2 கப்
    3. வெங்காயம் - 1
    4. தக்காளி -1
    5. பூண்டு - 3 பல்
    6. பச்சை மிளகாய் - 2
    7. மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
    8. மிளகாய் தூள் - 1/2ஸ்பூன்
    9. தனியா தூள் - 1/2ஸ்பூன்
    10. உப்பு - 3/4ஸ்பூன்
    11. கடுகு- 1/4ஸ்பூன்
    12. சீரகம் - 1/4ஸ்பூன்
    13. கறிவேப்பிலை- சிறிது
    14. கொத்தமல்லி - சிறிது
    15. எண்ணெய் - 3 ஸ்பூன்

    செய்முறை:

    1. Pressure கூகேரில் பாசிப்பருப்பு,மஞ்சள் தூள், 1 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
    2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், லேசாக கீறிய பச்சை மிளகாய், தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    4. தக்காளி நன்கு வதங்கியதும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
    5. கத்திரிக்காய் வதங்கியதும் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
    6. பின் அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
    7. கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த பாசிபருப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
    8. கத்திரிக்காய் கொத்சு ரெடி, வெண்பொங்கல் உடன் பரிமாறவும்.

    ரவா லட்டு

    தேவையான பொருட்கள்:

    1. ரவை -1 கப்
    2. நெய் – 5 ஸ்பூன்
    3. சர்க்கரை - 1/2 கப்
    4. ஏலக்காய்பொடி- 1/4 ஸ்பூன்
    5. திராட்சை- 10
    6. முந்திரி - 10
    7. பால் - 1/4 கப்
    செய்முறை:
    1. கடாயில் நெய்யை ஊற்றி சூடானதும் அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.
    2. அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்துகொள்ளவும்.ரவை பச்சை வாடை போகும் வரை வறுக்கவும்.
    3. ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
    4. இதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.
    5. அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான ரவா லட்டு ரெடி.
    குறிப்பு:

    உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும்.

    ஆப்பிள் மில்க் ஷேக்


    ஆய்வுகள் ஆப்பிள் இரத்த கொழுப்பு குறைக்க உதவும் என்று கூறுகிறது.ஆப்பிள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை எதிர்கொள்ள உதவுதோடு மேலும் நோய் எதிராக பாதுகாப்புகளை மேம்படுத்துவதில் உதவுகிறது.


    தேவையான பொருட்கள்:
    1. ஆப்பிள்- 1
    2. சக்கரை - 2 ஸ்பூன்
    3. பால் - 2 கப்
    4. ஐஸ் கட்டி - 10

    செய்முறை :
    1. மிக்ஸ்யில் தோல்,கொட்டை நீக்கிய ஆப்பிள்,சக்கரை,பால்,ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.
    2. ஆப்பிள் மில்க் ஷேக் ரெடி.


    குறிப்பு :


    விரும்பினால் எல்லா மில்க் ஷேக்களில் 2 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்த்து அடித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    மட்டர் பனீர் குருமா

    தேவையான பொருட்கள்:

    1. பனீர்- 100 கிராம்
    2. பட்டாணி - 1/2 கப்
    3. வெங்காயம்-1
    4. தக்காளி-1
    5. பச்சைமிளகாய்-2
    6. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
    7. பட்டை-2
    8. கிராம்பு - 2
    9. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
    10. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    11. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    12. உப்பு-3/4 ஸ்பூன்
    13. கொத்தமல்லி-சிறிது
    14. எண்ணெய்- 5 ஸ்பூன்
    அரைக்க :
    1. தேங்காய் துருவல் - 1/2 கப்
    2. முந்தரிபருப்பு-6
    செய்முறை :
    1. Nonstick கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதாக வெட்டி வைத்த பனீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
    2. பின் அதே எண்ணையில் பட்டை,கிராம்பு போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம்,லேசாக கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    5. தக்காளி வதங்கியதும் மிதமான தீயில் வைத்து மிளகாய்த்தூள், தனியாதூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
    6. பின் அதில் பட்டாணி சேர்த்து வதக்கி, தண்ணீர் 1 கப் ஊற்றி பட்டாணியை வேகவிடவும்.
    7. பட்டாணி பாதி வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய்,முந்தரி பேஸ்ட் கலவையை அதில் போட்டு கிளறவும்.
    8. 5 நிமிடம் கொதித்ததும் பனீர் துண்டுகளை அதில் சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
    9. சிறிதாக வெட்டி வைத்த கொத்தமல்லி இலையை தூவி சப்பாத்தி, naan உடன் பரிமாறவும்.

    கிர்ணிபழம் மில்க் ஷேக்

    தேவையான பொருட்கள்:
    1. கிர்ணிபழம்(cantaloupe) - 1 கப்
    2. சக்கரை - 3 ஸ்பூன்
    3. பால் - 2 கப்
    4. ஐஸ் கட்டி - 10

    செய்முறை :
    1. மிக்ஸ்யில் தோல்,கொட்டை நீக்கிய கிர்ணிபழம்,சக்கரை,பால்,ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.
    2. கிர்ணிபழம் மில்க் ஷேக் ரெடி.
    குறிப்பு:

    கிர்ணிபழம் உடல் சூட்டை தணிக்கும்,அதனால் வெயில் காலத்திற்கு ஏற்ற மில்க் ஷேக்.

    வெண்டைக்காய் பொரியல்

    தேவையான பொருட்கள்:

    1. வெண்டைக்காய் - 250 கிராம்
    2. கடுகு- 1/4 ஸ்பூன்
    3. உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
    4. க.மிளகாய் - 2
    5. உப்பு - 3/4 ஸ்பூன்
    6. மிளகுதூள் -1/2 ஸ்பூன்
    7. எண்ணெய் - 3 ஸ்பூன்
    8. பூண்டு-2 பல்
    9. வெங்காயம்-1
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு,க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
    3. வெண்டைக்காய் பாதி வெந்ததும் உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
    4. மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
    குறிப்பு :

    வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது மூடி போட்டு வேகவிடவேண்டாம்.

    வெண்டைக்காய் பகோடா

    தேவையான பொருட்கள்:
    1. வெண்டைக்காய் - 15
    2. கடலைமாவு- 3/4 கப்
    3. கார்ன் மாவு - 1/4 கப்
    4. உப்பு - 1/2 ஸ்பூன்
    5. மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
    6. எண்ணெய்- பொரிக்க
    செய்முறை:

    1. வெண்டைக்காய் நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
    2. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,மிளகாய்த்தூள்,கார்ன் மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
    3. பின் அதில் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிசறவும்.
    4. வெண்டைக்காயில் இருக்கும் தண்ணீர் பதத்தில் மசாலா கலவை நன்கு ஒட்டிக்கொள்ளும்.
    5. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் வெண்டைக்காயை போட்டு மொறு மொறுவென ஆகும் வரை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.மொறு மொறு வெண்டைக்காய் பகோடா ரெடி.

    பீர்கங்காய் கூட்டு

    தேவையான பொருட்கள்:
    1. பீர்கங்காய் - 2
    2. துவரம்பருப்பு-1/4 கப்
    3. பாசிபருப்பு-1/2 கப்
    4. வெங்காயம்-1
    5. தக்காளி-1
    6. பச்சைமிளகாய் -2
    7. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    8. சீரகம்- 1/4ஸ்பூன்
    9. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    10. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
    11. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    12. உப்பு-1/2 ஸ்பூன்
    13. எண்ணெய்-2 ஸ்பூன்
    14. கருவேப்பிலை-சிறிது
    15. கடுகு-1/4 ஸ்பூன்
    செய்முறை:

    1. cooker வைத்து அதில் பாசிபருப்பு,துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மஞ்சள்தூள்,1 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
    2. பின் கூகர் திறந்து அதில் தோல் சீவி,கொட்டை நீக்கி வெட்டிவைத்த பீர்கங்காய்,தனியாதூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து 1 விசில் விடவும்.
    3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி,தக்காளி சேர்த்து வதக்கவும்.
    5. வதங்கியதும் வேகவைத்ததை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    6. பீர்கங்காய் கூட்டு ரெடி.
    குறிப்பு:

    பீர்கங்காய் தோல் வைத்து துவையல் அரைக்கலாம், அதன் செய்முறை சட்னி பிரிவில் காணலாம்.

    சேப்பங்கிழங்கு வறுவல்

    தேவையான பொருட்கள்:

    1. சேப்பங்கிழங்கு - 4
    2. பூண்டு - 3 பல்
    3. கறிவேப்பிலை - சிறிது
    4. கடுகு- 1/4 ஸ்பூன்
    5. உள்ளுதம்பருப்பு- 1/4 ஸ்பூன்
    6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    7. மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
    8. தனியா தூள் -3/4ஸ்பூன்
    9. மிளகு தூள் -1/2ஸ்பூன்
    10. உப்பு - 3/4 ஸ்பூன்
    11. எண்ணெய் -3 ஸ்பூன்

    செய்முறை:
    1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சேப்பங்கிழங்கை வேக வைக்கவும்.
    2. சேப்பங்கிழங்கு தோல் நீக்கிவிட்டு,நறுக்கிவைத்து கொள்ளவும்.
    3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூளை சேர்க்கவும்.
    4. அதில் தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
    5. பின்னர் சேப்பங்கிழங்கு சேர்த்து நன்கு வறுக்கவும்.
    6. இதனுடன் உப்பு,மிளகு தூள் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும்.

    மாம்பழ மில்க் ஷேக்

    தேவையான பொருட்கள்:

    1. மாம்பழம் - 1
    2. சக்கரை - 1/4 கப்
    3. பால் - 2 கப்
    4. ஐஸ் கட்டி - 10

    செய்முறை :

    1. மிக்ஸ்யில் மாம்பழம்,சக்கரை,பால்,ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.
    2. மாம்பழ மில்க் ஷேக் ரெடி.

    மாதுளை மில்க் ஷேக்

    தேவையான பொருட்கள் :
    1. மாதுளம்பழம்- 1
    2. பால்-1 கப்
    3. சக்கரை -1/2 கப்
    4. ஐஸ் கியுப்- 10

    செய்முறை:
    1. மாதுளைபழத்தை தோல் உரித்து விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
    2. மாதுளைவிதைகளை மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் பால் சேர்த்து அரைக்கவும்.
    3. பின் சக்கரை,ஐஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ்யில் 2 நிமிடம் நன்கு அரைக்கவும்.
    4. சுவையான மாதுளை மில்க் ஷேக் ரெடி.
    குறிப்பு :

    மிக்ஸ்யில் ஜூஸ் extractor ல் போட்டு அரைத்தால் வடிகட்டும் வேலை எளிது.

    வெஜ் கட்லெட்


    தேவையான பொருட்கள்:
    1. உருளைக்கிழங்கு - 2
    2. பீன்ஸ் - 6
    3. காரட் - 1
    4. பச்சைபட்டாணி - 1/4 கப்
    5. கொத்தமல்லி-சிறிது
    6. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    7. சீரகம் -1/4 ஸ்பூன்
    8. கரம்மசாலா - 1/2 ஸ்பூன்
    9. உப்பு - 3/4 ஸ்பூன்
    10. மிளகாய்த்தூள் -3/4 ஸ்பூன்
    11. தனியாதூள்- 1/2 ஸ்பூன்
    12. மஞ்சள் தூள்- சிறிது
    13. முந்தரிபருப்பு - 5
    14. லெமன் - 1
    15. மைதா- 2 ஸ்பூன்
    16. பிரட் தூள்- 1 கப்
    17. எண்ணெய்- 15 ஸ்பூன்
    செய்முறை:
    1. உருளைகிழங்கை வேகவைத்து,தோல் உறித்து மசித்து வைத்துகொள்ளவும்.
    2. மற்ற காய்களை பொடியாக நறுக்கி வேகவைத்து கொள்ளவும்.
    3. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய முந்தரிபருப்பு சேர்த்து வதக்கவும்.
    4. பொன்னிறமாக மாறியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
    5. வதங்கியதும் வேகவைத்த காய்களை சேர்த்து வதக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி உருளைக்கிழங்கு, லெமன்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசையவும்.
    6. ஒரு கப்பில் மைதாமாவை 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவைக்கவும்.
    7. பிசைந்துவைத்த மசாலாவை சிறு உருண்டைகளாக எடுத்து கட்லெட் வடிவில் செய்து அதை மைதா கலவையில் லேசாக டிப் செய்து உடனே பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.
    8. Nonstick கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட் துண்டுகளை அதில் போட்டு தோசை போல இரண்டு பக்கம் சிவக்க எடுக்கவும்.
    9. yummy கட்லட் ரெடி ketchup உடன் பரிமாறவும்.

    குறிப்பு :

    கட்லெட் கலவை செய்யும் பொது மசாலாவில் தண்ணீர் பதம் இல்லாமல்  பார்த்துகொள்ளவும். அப்படி தண்ணீர் பதம் இருந்தால் சிறிது பிரட் தூளை சேர்த்து பிசைந்துகொள்ளவும். மைதா கலவையில் டிப் செய்வது பிரட் தூள்கள் நன்றாக ஓட்டுவதற்கு.கடைகளில் கட்லெட் cutter வாங்கி  உங்களுக்கு பிடித்த வடிவில் செய்து கொள்ளலாம்.

    தக்காளி தொக்கு

    தேவையான பொருட்கள்:
    1. வெங்காயம்-1
    2. தக்காளி-1
    3. பூண்டு-3 பல்
    4. கடுகு-1/4 ஸ்பூன்
    5. உள்ளுதம்பருப்பு-1/2 ஸ்பூன்
    6. கருவேப்பிலை-சிறிது
    7. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
    8. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    9. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    10. உப்பு-3/4 ஸ்பூன்
    11. எண்ணெய்-4 ஸ்பூன்
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
    2. பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
    4. வதங்கியதும் மிளகாய்த்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
    5. நன்கு கொதித்து எண்ணெய் மேலே வந்ததும் சப்பாத்தி,தோசையுடன் பரிமாறவும்.

    மீன் தொக்கு

    தேவையான பொருட்கள் :
    1. மீன் - 1/2 கிலோ
    2. வெங்காயம் - 1
    3. தக்காளி - 1
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    5. மிளகு தூள் - 1 ஸ்பூன்
    6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    7. தனியா தூள் - 1 ஸ்பூன்
    8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    9. கருவேப்பிலை-சிறிது
    10. கொத்தமல்லி- சிறிது
    11. உப்பு- 1 ஸ்பூன்
    12. எண்ணெய் - 3 ஸ்பூன்
    செய்முறை:
    1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    3. இஞ்சிபூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
    4. தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
    5. தண்ணீர் 1 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு சேர்த்து வேகவிடவும்.
    6. நன்றாக மீன் வெந்து,மசாலா தொக்கு போலானதும் கொத்தமல்லி தூவி  இறக்கிவிடவும்.
    குறிப்பு :

    மீனை திருப்பும் போது மீன் துண்டுகள் உடையாமல் பொருமையாக திருப்பவும்.

    கடாய் பனீர்

     தேவையான பொருட்கள் :
    1. பனீர் - 1 கப்
    2. கொடமிளகாய் - 1
    3. வெங்காயம் - 1
    4. தக்காளி-1
    5. இஞ்சி - சிறிது
    6. பூண்டு-4 பல்
    7. பட்டை-2
    8. கிராம்பு-2
    9. பிரியாணி இலை -2
    10. கரம்மசாலா-1/4 ஸ்பூன்
    11. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
    12. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    13. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
    14. உப்பு-1 ஸ்பூன்
    15. கொத்தமல்லி-சிறிது
    16. எண்ணெய் -3 ஸ்பூன்
    17. நெய் -2 ஸ்பூன்
    18. கேசரி கலர் - சிறிது

    செய்முறை:

    1. முதலில் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீர் துண்டுகளை போட்டு பொரித்து கொள்ளவும்.
    2. அதே பாத்திரத்தில் எண்ணெய்,நெய் சேர்த்து சூடானதும் பட்டை,கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பொடியாக நறுக்கியதை சேர்த்து வதக்கவும்.
    4. அதில் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
    5. பின் அதில் கொடமிளகாய் சேர்த்து வதக்கவும். பாதி வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாதூள்,கரம்மசாலா,உப்பு,கேசரி கலர் சேர்த்து வதக்கவும்.
    6. பனீர் துண்டுகள்,1/2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி naan ,பரோட்டா உடன் பரிமாறவும்.

    மாங்காய் பச்சடி

    மாங்காய் பச்சடி என்றாலே நம் தமிழ் புத்தாண்டு தாங்கா எனக்கு ஞாபகம் வரும். எங்க அம்மா மாங்காய் பச்சடிக்கும் நம் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு சொல்வாங்க என்ன தெரியுமா உங்களுக்கு ? மாங்காய் பச்சடியில சேர்த்து சமைக்கற புளிப்பு தரும் மாங்காய், இனிப்பு தரும் வெல்லம்,காரம் தரும் மிளகாய்த்தூள்,துவர்ப்பு தரும் வேப்பம்பூ,கரிப்பு தரும் உப்பு போல நம் வாழ்கையிலும் சந்தோசம்,துக்கம் எல்லாம் கலந்து இருக்குமாம் அதை பிள்ளைங்களுக்கு சொல்றதுக்கு தான் தமிழ் புத்தாண்டுக்கு பச்சடி செஞ்சு நாம கொண்டாடறோம்.

    தேவையான பொருட்கள் :
    1. மாங்காய் - 3 கப்
    2. வெல்லம் - 1 கப்
    3. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
    4. உப்பு-1/4 ஸ்பூன்
    5. வேப்பம்பூ - 1/4 ஸ்பூன்
    6. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
    7. எண்ணெய்-1 ஸ்பூன்
    8. கடுகு- 1/4 ஸ்பூன்

    செய்முறை :
    1. மாங்காய் தோலை சீவி, மெலிதாக வெட்டி கொள்ளவும். பின் அதை பிரஷர் கூகேரில் 1 1/2 கப் தண்ணீர்,உப்பு,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 1 விசில் விடவும்.
    2. பாத்திரத்தில் வெல்லம், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
    3. 5 நிமிடம் பிறகு வெல்லம் கெட்டியானதும் வேகவைத்த மாங்காய், வேப்பம்பூசேர்த்து நன்கு கிளறவும்.
    4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் மாங்காய் கலவையுடன் சேர்த்து கிளறி பரிமாறவும். 

    சிக்கன் குருமா

    தேவையான பொருட்கள்:

    1. சிக்கன் - 1/2 கிலோ
    2. வெங்காயம் - 1
    3. தக்காளி -1
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
    5. சோம்பு-1/4 ஸ்பூன்
    6. பட்டை-2
    7. கிராம்பு-2
    8. எண்ணெய்-4 ஸ்பூன்
    9. கொத்தமல்லி-சிறிது
    10. தேங்காய் துருவல் -1 கப்
    11. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
    12. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    13. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    14. உப்பு-1 ஸ்பூன்
    செய்முறை:

    1. பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் பட்டை,கிராம்பு,சோம்பு சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    3. வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    4. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
    5. பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
    6. சிக்கன் பாதி வெந்ததும் அரைத்து வைத்ததேங்காய் பேஸ்ட் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    7. சிக்கன் வெந்ததும், கொத்தமல்லி தூவி சாதம்,சாப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.
    குறிப்பு:

    சிக்கன் கிரேவி இன்னும் சுவைகூட்ட8 முந்தரிபருப்பை தேங்காயுடன் சேர்த்து அரைத்து ஊற்றவும்.

    செட்டிநாடு முட்டை குழம்பு


    தேவையான பொருட்கள்:
    1. முட்டை - 4 ( வேகவைத்தது)
    2. வெங்காயம் - 1
    3. தக்காளி - 1
    4. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    6. உப்பு - 1 ஸ்பூன்
    7. கடுகு - 1/4 ஸ்பூன்
    8. சீரகம் -1/4 ஸ்பூன்
    9. கொத்தமல்லி - சிறிது
    10. கருவேப்பிலை - சிறிது

      வறுத்து அரைக்க:
      1. எண்ணேய் - 1 ஸ்பூன்
      2. தனியா- 2ஸ்பூன்
      3. க.மிளகாய் - 3
      4. பூண்டு - 4 பல்
      5. இஞ்சி -சிறியது
      6. மிளகு - 1 ஸ்பூன்
      7. சீரகம் - 1 ஸ்பூன்
      8. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
      9. கருவேப்பிலை - சிறிது
      செய்முறை :

      1. ஒரு சிறிய கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் தேங்காய் தவிர வறுக்க வேண்டியவை அனைத்தையும் வறுக்கவும்.
      2. வறுத்தெடுத்த அனைத்தையும் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
      3. ஒரு கடாயில்எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, கருவேப்பிலை ,வெங்காயம் போட்டு வதக்கவும்.
      4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
      5. தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
      6. கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கொத்தமல்லி தூவி சப்பாத்தி, பரோடா உடன் சாப்பிடவும்.


    • குறிப்பு :
    • தனியா, க.மிளகாய் பதிலாக மிளகாய் தூள், தனியா தூள் போட்டு அரைத்து கொள்ளவும்.




        க்ரீன் ஃபிஷ் கறி


        தேவையான பொருட்கள் :


        1. மீன் - 300 கிராம்
        2. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
        3. உப்பு - 2ஸ்பூன்
        4. வெங்காயம் - 1
        5. மிளகாய் - 5
        6. பூண்டு - 2 பல்
        7. தேங்காய் துருவல் - 2ஸ்பூன்
        8. முந்திரிபருப்பு - 6
        9. எண்ணெய் - 4ஸ்பூன்
        10. சீரகம் - 1/4ஸ்பூன்
        11. சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
        12. தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
        13. பெருஞ்சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
        14. தயிர் - 1/4 கப்
        15. தண்ணீர் - 1 கப்
        16. கொத்தமல்லி இலை- சிறிது


        செய்முறை :
        1. மீனை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
        2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைத்திருக்கவும்.
        3. மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி இலை, முந்திரி, தேங்காய், பூண்டு, மல்லித் தூள், சீரகம், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
        4. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
        5. அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதினை போட்டு நன்கு வதக்கவும்.
        6. அதன் பிறகு சிறிது தண்ணீர் மற்றும் மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும். அதில் தயிரை ஊற்றி கலக்கி விடவும்.
        7. ஊற வைத்திருக்கும் மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
        8. அடுப்பின் தீயை மிதமாக வைத்து மீன் வேகும் வரை மூடி வைத்திருக்கவும்.
        9. 10 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கி வைக்கவும்.
        10. சுவையான க்ரீன் ஃபிஷ் கறி ரெடி.இதனை சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.

        மீன் குழம்பு


        தேவையான பொருட்கள் :  

        எண்ணெய்-4 ஸ்பூன்
        கருவேப்பில்லை - சிறிது
        வெங்காயம் - 1
        பூண்டு-4
        கடுகு- 1/4 ஸ்பூன்
        வெந்தயம்-1/4ஸ்பூன்
        சீரகம் - 1/4 ஸ்பூன்
        மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
        தனியா தூள் - 2 ஸ்பூன்
        மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
        புளி கரைசல் - 1 கப்
        பச்சை மிளகாய் - 2
        உப்பு - 2 ஸ்பூன்


        அரைக்க தேவையானவை :

        வெங்காயம் - 1
        தக்காளி-1

        செய்முறை
        1. முதலில் வெங்காயம், தக்காளி நன்றாக மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
        2. ஒரு கடாய் வைத்து அதில் 4 எண்ணெய் ஸ்பூன் சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போடவும்.
        3. பொரிந்ததும் சிறியதாக வெட்டி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
        4. பின்பு அதில் அரைத்து வைத்ததை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
        5. அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
        6. நன்கு கொதித்ததும் சுத்தம் செய்து வைத்த மீன் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்.
        7. மீன் வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

        தயிர் வடை


        தேவையான பொருட்கள் :

        1. மெது வடை - 10
        2. தயிர் - 2 கப்
        3. கடுகு - 1/4 ஸ்பூன்
        4. க.மிளகாய் - 2
        5. தேங்காய் துருவல் - 1/2 கப்
        6. சீரகம் - 1/4 ஸ்பூன்
        7. பச்சைமிளகாய் - 1
        8. இஞ்சி - சிறிது
        9. கொத்தமல்லி - சிறிது
        10. உப்பு - 1/2 ஸ்பூன்
        11. காராபூந்தி - 2 ஸ்பூன்

        செய்முறை :

        1. வடையை பொரித்து எடுக்கும் பொழுதே ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் வடையை போட்டு 30 நொடி பிறகு எடுத்து தண்ணீரை பிழிந்து எடுத்துகொள்ளவும்.
        2. மிக்ஸியில் தேங்காய்,பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
        3. ஒரு பாத்திரத்தில் தயிர் ,உப்பு போட்டு அடித்து கொள்ளவும். பின் அரைத்து வைத்ததை சேர்த்து 2 கப் தண்ணீர் உற்றி கலக்கவும். கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் தயிர் கலவையில் சேர்க்கவும்.
        4. வடையை தயிரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து காராபூந்தி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

        ஆரஞ்சு ஜூஸ்


        கொய்யா, மஞ்சள் கிவி பழங்களுக்கு அடுத்து ஆரஞ்சு பழத்தில் தான் வைட்டமின் C அதிகம் உள்ளது. வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.ஆரஞ்சு பழம் மலசிகல்கள் நீக்க உதவுவதோடு,அதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுமையடைய செய்கிறது.

        தேவையான பொருட்கள்:

          orange juice Orange
        1. ஆரஞ்சு - 2
        2. சக்கரை-2 ஸ்பூன்
        3. ஐஸ் கட்டி - 5 cube
        4. தண்ணீர் - 1/2 கப்
        செய்முறை:

        1. ஆரஞ்சுபழ தோலை நீக்கி அதின் உள்ளே இருக்கும் கொட்டைகள் நீக்கி பழத்தை மிக்ஸ்யில் போட்டு, சக்கரை சேர்த்து நன்கு அடிக்கவும்.
        2. பின் ஐஸ் கட்டி சேர்த்து நன்கு மிக்ஸ்யில்அடித்து ,1/2 கப் தண்ணீர் ஊற்றி கலந்து குடிக்கவும்.

        குறிப்பு :

        கிளியர் ஆரஞ்சு ஜூஸ் வேண்டும் என்றால் ஜூஸ் extractorல் போட்டு ஜூஸ் செய்யவும். குழந்தைகளுக்கு குடுக்க எளிதாக இருக்கும்.

        சன்னா மசாலா

        தேவையான பொருட்கள் :

        1. வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
        2. வெங்காயம் - 1
        3. தக்காளி - 1
        4. பச்சை மிளகாய் -1
        5. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
        6. தனியாதூள் - 1/2 ஸ்பூன்
        7. உப்பு - 1 ஸ்பூன்
        8. மஞ்சள் துள் - 1/4 ஸ்பூன்
        9. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
        10. எண்ணெய் -3 ஸ்பூன்
        11. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
        12. சீரகம் - 1/4 ஸ்பூன்
        13. பூண்டு - 3 பல்
        14. கொத்தமல்லி - சிறிது

        செய்முறை :

        1. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் தூள், மூன்று பல் பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு  இறக்கவும்.
        2. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும்  பச்சைமிளகாய்,அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
        3. வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
        4. பிறகு எல்லாம் சேர்ந்து வதங்கியதும் குக்கரில் வேக வைத்த கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

        குறிப்பு :

        மசாலா திக்காக இருக்க 3 ஸ்பூன் வெந்த கொண்டைகடலை எடுத்து மிக்ஸ்யில் அரைத்து சேர்க்கவும்.

        டபுள் பீன்ஸ் கிரேவி

        தேவையான பொருட்கள்:


        1. டபுள் பீன்ஸ் - 1 கப்
        2. வெங்காயம் -1
        3. தக்காளி-1
        4. இஞ்சி - சிறிது
        5. பூண்டு -5 பல்
        6. பட்டை-2
        7. கிராம்பு-2
        8. ஏலக்காய் -2
        9. சோம்பு -1/4ஸ்பூன்
        10. சீரகம் -1/4 ஸ்பூன்
        11. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
        12. தனியாதூள்-1/2 ஸ்பூன்
        13. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
        14. உப்பு-1 ஸ்பூன்
        15. கொத்தமல்லி-சிறிது
        16. எண்ணெய் - 4 ஸ்பூன்

        செய்முறை :

        1. முதலில் டபுள் பீன்ஸ் 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.
        2. பின் அதை ஒரு குக்கரில் டபுள் பீன்ஸ்,1/4 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
        3. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,சோம்பு,சீரகம் சேர்த்து வதக்கவும்.
        4. பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
        5. வெங்காயம் வதங்கியதும், சிறிதாக நறுக்கிய இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
        6. பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
        7. தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள்,தனியாதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிளகாய்த்தூள் வாசனை போக்கும் வரை சிறு தீயில் வதக்கவும்.
        8. பின் அடுப்பை அணைத்து மசாலாவை ஆறவிடவும்.
        9. ஆறியதும் மிக்ஸ்யில் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கிவைத்த மசாலாவை நன்றாக அரைக்கவும்.
        10. பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து 1 கப் தண்ணீர்,வேகவைத்த டபுள் பீன்ஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
        11. 10 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தூவி கிளறி சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.

        குறிப்பு :

        கிரேவி இன்னும் சுவையாக இருக்க 10 முந்தரி பருப்பு வறுத்து அரைக்கும் மசாலாவில் சேர்க்கலாம்.

        ஊத்தாப்பம்

        தேவையான பொருட்கள் :

        1. தோசை மாவு - 2 கப்
        2. எண்ணெய் - 3 ஸ்பூன்
        3. கடுகு -1/4 ஸ்பூன்
        4. உள்ளுதம்பருப்பு -1/2 ஸ்பூன்
        5. கடலைபருப்பு -1/2 ஸ்பூன்
        6. சீரகம் -1/4 ஸ்பூன்
        7. வெங்காயம் - 1
        8. பச்சைமிளகாய்- 2
        9. கருவேப்பிலை - சிறிது
        10. கொத்தமல்லி - சிறிது

        செய்முறை:
        1. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
        2. வெங்காயம் வதங்கியதும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி அதை தோசை மாவில் சேர்த்து நன்கு கலக்கி ஒரு தவாவில் தடியாக தோசை போல போடவும்.
        3. இருபுறமும் நன்கு வேகும் வரை விட்டு எடுத்து பரிமாறவும்.

        இட்லி உப்புமா

        தேவையான பொருட்கள்:
        1. இட்லி - 4
        2. எண்ணெய் -3 ஸ்பூன்
        3. கடுகு-1/4 ஸ்பூன்
        4. சீரகம்-1/4 ஸ்பூன்
        5. உள்ளுதம்பருப்பு- 1 ஸ்பூன்
        6. கடலை பருப்பு- 1 ஸ்பூன்
        7. கறிவேப்பிலை -சிறிது
        8. க.மிளகாய் - 2
        9. மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
        10. தனியாதூள் -1/2 ஸ்பூன்
        11. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
        12. உப்பு - 1/4 ஸ்பூன்
        13. வெங்காயம் - 1
        14. கொத்தமல்லி - சிறிது

        செய்முறை :

        1. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு,சீரகம்,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை,க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
        2. வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் சிறுந்தீயில் வதக்கும்.
        3. பின் அதில் உதிர்த்துவைத்த இட்லி சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
        குறிப்பு :

        இட்லி'யை சிறிது நேரம் பிரிஜில் வைத்து எடுத்து உதிர்க்கவும்.அது நன்கு உதிர்க்க உதவும்.

        தஹி பூரி

        தேவையான பொருட்கள் :
        1. சிறிய பூரி - 10
        2. சன்னா(வேகவைத்தது)- 3 ஸ்பூன்
        3. தயிர் - 1 கப்
        4. ஸ்வீட் புளி சட்னி - 3 ஸ்பூன்
        5. உப்பு - 1/4 ஸ்பூன்
        6. வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
        7. சேவ் - 1 கப்
        8. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
        9. மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
        10. கொத்தமல்லி - சிறிது
        செய்முறை :

        1. பூரிகளை ஒரு பரிமாறும் தட்டில் வைத்து கொள்ளவும்.
        2. பூரியில் மேலே சிறு ஒட்டையிடவும். பின் உள்ளே சன்னா, உருளைக்கிழங்கு, ஸ்வீட் புளி சட்னி சிறிது, உப்பு சேர்த்து அடித்த தயிர் சேர்க்கவும்.
        3. பின் அதன் மேலே சேவ்,சிறிது மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,கொத்தமல்லி  தூவி அலங்கரிக்கவும். தஹி பூரி ரெடி.
        குறிப்பு :

        பூரி வீட்டில் செய்ய முடியாதவர்கள் கடையில் பானி பூரிகாக விற்கும் பூரி வாங்கி செய்யலாம்.

        ரவா பொங்கல்

         தேவையான பொருட்கள் :
        1. ரவை - 1 கப்
        2. பாசிப்பருப்பு - 1/4 கப்
        3. மிளகு - 1/2 ஸ்பூன்
        4. சீரகம் - 1/2 ஸ்பூன்
        5. இஞ்சி - சிறிது
        6. கறிவேப்பிலை -சிறிது
        7. பெருங்காயம் - சிறிது
        8. முந்திரி - 8
        9. நெய் -6 ஸ்பூன்
        10. உப்பு - 3 /4 ஸ்பூன்
        செய்முறை :
        1. குக்கரில் பாசிபருப்பு போட்டு வறுத்து 1 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்.
        2. பின் ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து கிளறவும்.
        3. ரவை பொன்னிறமாக வறுத்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
        4. பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
        5. நன்கு கொதித்ததும் வெந்த பாசிபருப்பு சேர்த்து கிளறவும்.
        6. பின் வறுத்துவைத்த ரவை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
        7. இன்னொரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடானதும் கருவேப்பிலை, சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பெருங்கயத்தூள் சேர்த்து வதக்கி பொங்கல் மீது கொட்டி கிளறவும்.
        8. பின் அதே பாத்திரத்தில் மீதமுள்ள நெய் விட்டு முந்தரி வறுத்து பொங்கலுடன் சேர்த்து தேங்காய் சட்னி, சாம்பார்டன் பரிமாறவும்.
        குறிப்பு :  

        ரவையை போட்டு கிளரும் பொது அடுப்பை சிறுதீயில் வைத்து கிளறவும்.

        ரவா இட்லி

        தேவையான பொருட்கள் :
        1. வறுத்த ரவை - 1 கப்
        2. நெய் - 1 ஸ்பூன்
        3. எண்ணெய்- 1 ஸ்பூன்
        4. கடுகு - 1/2 ஸ்பூன்
        5. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
        6. உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
        7. இஞ்சி - சிறிது
        8. பச்சை மிளகாய் - 1
        9. கொத்துமல்லி - 1/2 கப்
        10. வறுத்த முந்திரிபருப்பு - 10
        11. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
        12. தயிர் - 2 கப்
        13. உப்பு - 1 ஸ்பூன்

        செய்முறை :

        1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்,நெய்யை சூடானதும் கடுகு, கடலை பருப்பு,உள்ளுதம்பருப்பு போட்டு பொரிந்ததும்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
        2. வதங்கியதும் அதில் ரவை சேர்த்து வதக்கவும்.
        3. பின்பு ரவை சூடு ஆறியதும் கொத்துமல்லி,மஞ்சள்தூள்,தயிரையும் சேர்த்து பிரட்டி உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
        4. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்ததும் தட்டுகளில் எண்ணெய் தடவி முந்திரிப்பருப்பும் அதன் மேல் ரவா இட்லி மாவினை ஊற்றி வேக விடவும்.
        5. சுவையான ரவா இட்லி ரெடி.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

        ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

        தேவையான பொருட்கள் :

        1. பெரிய உருளைக்கிழங்கு - 2
        2. எண்ணெய் - பொரிக்க
        3. மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
        4. உப்பு - 1/2 ஸ்பூன்

        செய்முறை :

        1. உருளைக்கிழங்கை தோல் சீவிநீளமான துண்டுகளாக நறுக்கி ஐஸ் தண்ணீரில் போட்டு 1நேரம் ஊறவிடவும்.
        2. பிறகு உருளைத்துண்டுகளை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்து விடவும்.
        3. பின் எண்ணெய் ஒரு கடாயில் வைத்து சூடானதும் உருளைகிழங்கை போட்டு பொரித்து எடுக்கவும்.
        4. சூடாக இருக்கும் போதே அதில் உப்பு,மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும். சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் ரெடி.
        குறிப்பு :

        ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த snack.ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்உடனேயே பரிமாறவும் அல்லது கிரிஸ்பி போய்விடும்.


        மட்டன் மிளகு தொக்கு

        தேவையான பொருட்கள்:
        1. மட்டன் - 500 கிராம்
        2. வெங்காயம் - 1
        3. தக்காளி - 1
        4. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
        5. பிரியாணிஇலை - 2
        6. பட்டை - 2
        7. கிராம்பு - 2
        8. மிளகு தூள் -1 ஸ்பூன்
        9. சீரகம் -1/2 ஸ்பூன்
        10. சோம்பு -1/2 ஸ்பூன்
        11. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
        12. தனியாதூள் -1 ஸ்பூன்
        13. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
        14. உப்பு - 1 ஸ்பூன்
        15. எண்ணெய் - 3 ஸ்பூன்
        16. கொத்தமல்லி - சிறிது

        செய்முறை :

        1. மட்டன் கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் விடவும்.
        2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கரம்பு,இலையை போட்டு தாளிக்கவும்.
        3. பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.
        4. வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
        5. வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
        6. தக்காளி வதங்கியதும் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்த பேஸ்ட்,மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம் பிரட்டி விடவும். மிளகாய் வாசனை போகும் வரை பிரட்டவும்.
        7. பின் அதில் வேகவைத்த மட்டன் மற்றும் மட்டன் தண்ணீரை சேர்த்து வதக்கவும்.
        8. 10 நிமிடம் வதங்கியதும் மிளகு சேர்த்து கிளறி 5 நிமிடம் வதக்கவும்.
        9. பின் கொத்தமல்லி தூவி மிளகு மட்டன் தொக்கு ரெடி. சூடான சாதம், சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.


        கோஸ் பொரியல்


        தேவையான பொருட்கள் :
        1. கோஸ் - 2 கப்
        2. வெங்காயம் - 1
        3. எண்ணெய் - 2 ஸ்பூன்
        4. கடுகு -1/4 ஸ்பூன்
        5. உள்ளுதம் பருப்பு -1/2 ஸ்பூன்
        6. கடலைபருப்பு -1/2 ஸ்பூன்
        7. கா.மிளகாய் - 3
        8. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
        9. உப்பு -1/2 ஸ்பூன்
        10. கருவேப்பிலை - சிறிது
        செய்முறை :

        1. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு, கருவேப்பிலை,க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
        2. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ் சேர்த்து வதக்கவும்.
        3. 2 நிமிடம் வதங்கியதும் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து வேகவிடவும்.வேண்டுமென்றால் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.