Pages

இறால் தொக்கு

தேவையான பொருட்கள்:
  1. இறால் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 2
  3. பூண்டு - 4 பல்
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  5. தக்காளி -1
  6. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  7. தனியா தூள்-1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  9. மிளகு தூள் -1 ஸ்பூன்
  10. உப்பு - 1 ஸ்பூன்
  11. எண்ணெய்-4 ஸ்பூன்
  12. கடுகு-1/4 ஸ்பூன்
  13. சீரகம்-1/4 ஸ்பூன்
  14. கறிவேப்பிலை- சிறிது
  15. கொத்தமல்லி - சிறிது
செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கி சுத்தம் செய்து வைத்த இறால் சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி மூடிபோட்டு வேகவிடவும்.
  4. இறால் நன்கு வெந்ததும் மிளகுதூள் சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.இறால் தொக்கு ரெடி.

உப்பு உருண்டை

தேவையான பொருட்கள்:
  1. இட்லி அரிசி - 2 கப்
  2. தேங்காய் - 1/2 கப்
  3. உப்பு -3/4 ஸ்பூன்
தாளிக்க :
  1. கடுகு - 1/4 ஸ்பூன்
  2. உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  3. கடலைபருப்பு-1/2 ஸ்பூன்
  4. க.மிளகாய்-5
  5. எண்ணெய் - 1 ஸ்பூன்
  6. கருவேப்பிலை-சிறிது
  7. கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
  1. அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து க்ரைண்டரில் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு,க.மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  3. அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
  4. பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த தேங்காய்,கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. மிதமான சூட்டில் மாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
  6. சுவையான உப்பு உருண்டை தயார்.

ஜீரா ஆலூ

தேவையான பொருட்கள்:
  1. உருளைகிழங்கு- 3
  2. சீரகம் - 1 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் - 2
  4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  5. தனியா தூள் - 1 ஸ்பூன்
  6. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை- சிறிது
  10. கொத்தமல்லி- சிறிது
  11. உப்பு- 3/4 ஸ்பூன்
  12. எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி cube வடிவில் நறுக்கி வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. லேசாக கீறிய பச்சை மிளகாய்,இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள்,தனியாதூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசம் போகும் வரை வதக்கி, உருளைகிழங்கை சேர்த்து வதக்கவும்.
  4. மசாலா உருளைக்கிழங்கு உடன் நன்றாக ஒட்டியதும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
  5. சுவையான ஜீரா ஆலூ தயார்.

மட்டன் சுக்கா


    தேவையான பொருட்கள்:
    1. மட்டன் - 1 /4 கிலோ
    2. சின்ன வெங்காயம் - 15
    3. தக்காளி - 1
    4. கரம் மசாலா - 1 1/2 ஸ்பூன்
    5. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1ஸ்பூன்
    6. மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
    7. மிளகுதூள்- 1 ஸ்பூன்
    8. உப்பு - 3/4 ஸ்பூன்
    9. எண்ணெய்- 5 ஸ்பூன்
    10. கடுகு-1/4 ஸ்பூன்
    11. கருவேப்பிலை - சிறிது
    செய்முறை:

      1. முதலில் சின்ன வெங்காயம் , தக்காளியை மிக்ஸ்யில் அரைத்துக்கொள்ளவும்.
      2. குக்கரில் மட்டன்,கரம்மசாலா,உப்பு,மிளகாய்த்தூள்,1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில்விடவும்.
      3. பின் அடுப்பில் கடாய்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம்,தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
      4. நன்கு பச்சை வாடை போகும் வரை வதக்கி,இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
      5. பின் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து சுருள வதக்கவும். பின் மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறி,கொத்தமல்லி தூவி பரிமாறவும்.மட்டன் சுக்கா ரெடி.

      தலைக்கறி கிரேவி

      தேவையான பொருட்கள்:
      1. ஆட்டு தலை- 1
      2. வெங்காயம்-2
      3. தக்காளி-2
      4. கறிவேப்பிலை-சிறிது
      5. பச்சை மிளகாய்-2
      6. இஞ்சிபூண்டு பேஸ்ட்-3 ஸ்பூன்
      7. சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
      8. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
      9. தனியா தூள்-1/2 ஸ்பூன்
      10. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
      11. எண்ணெய்-4 ஸ்பூன்
      12. பட்டை-1
      13. ஏலக்காய்-2
      14. கிராம்பு-2
      15. உப்பு-1 ஸ்பூன்
      16. கொத்தமல்லி-சிறிது
      17. தேங்காய் துருவல்- 1 கப்
      செய்முறை:

      1. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
      2. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
      3. தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
      4. நன்கு வதங்கியதும் சீரகத்தூள்,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
      5. 2 நிமிடம் வதக்கி,அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 5 விசில் விடவும்.
      6. பின் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
      7. தலைக்கறி கிரேவி தயார் கொத்தமல்லி இலை தூவி இட்லி,தோசை, சாதத்துடன் பரிமாறவும்.

      ப்ராக்கலி வறுவல்

      தேவையான பொருட்கள்:

        1. ப்ராக்கலி - 2 கப்
        2. எண்ணெய் - 2 ஸ்பூன்
        3. சீரகம் - 1/2 ஸ்பூன்
        4. பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
        5. பூண்டு - 3 பல்
        6. பச்சை மிளகாய் - 2
        மசாலா தயாரிக்க:

        1. பொட்டுகடலை மாவு - 1/2 கப்
        2. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
        3. மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
        4. சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
        5. தனியாதூள் - 1/2 ஸ்பூன்
        6. மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
        7. எண்ணெய் - 1 ஸ்பூன்
        8. உப்பு - 1 ஸ்பூன்
        செய்முறை:

                                        1. முதலில் ப்ராக்கலியை சிறிய பூக்களாக நறுக்கி தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து விடவும்.
                                        2. ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பெருங்காயத்தூள் போட்டு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
                                        3. வதங்கியதும் ப்ராக்கலியை போட்டு நன்கு வதக்கி பாதி வேகவிடவும்.
                                        4. ஒரு பாத்திரத்தில் மசாலா தயாரிக்க கொடுத்த பொருள்களை போட்டு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு ஸ்பூனை வைத்து கிளறவும்.
                                        5. பின் மசாலாக் கலவையை ப்ராக்கலி மீது தூவி விடவும்.நன்கு கிளறி 5 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.பின் கிளறி மொரு மொருவென ஆகும் வரை நன்கு வறுக்கவும்.
                                        6. சுவையான ப்ராக்கலி வறுவல் தயார்.

                                        தக்காளி சட்னி

                                        தேவையான பொருட்கள்:
                                        1. தக்காளி - 1
                                        2. வெங்காயம் - 1
                                        3. பூண்டு - 3 பல்
                                        4. கொத்தமல்லி -1/2 கப்
                                        5. தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
                                        6. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
                                        7. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
                                        8. க.மிளகாய்- 3
                                        9. புளி - சிறிது
                                        தாளிக்க:
                                        1. கடுகு - ஸ்பூன்
                                        2. சீரகம் - ஸ்பூன்
                                        3. கறிவேப்பிலை - சிறிது
                                        4. பெருங்காயம் - சிறிது
                                        5. எண்ணெய் - 3 ஸ்பூன்
                                        செய்முறை:

                                        1. கடாய் வைத்து சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, க.மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும்.
                                        2. அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
                                        3. சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
                                        4. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
                                        5. தக்காளி வதங்கியவுடன் கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
                                        6. இந்த கலவை ஆறியவுடன் முதலில் அரைத்த கலவையுடன் சேர்ந்து அரைத்துக் கொள்ளவும்.
                                        7. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
                                        8. சுவையான தக்காளி சட்னி தயார். இது சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.

                                        பருப்பு பொடி

                                        தேவையான பொருட்கள்:

                                        1. துவரம் பருப்பு-1 கப்
                                        2. கடலை பருப்பு-1/2 கப்
                                        3. க.மிளகாய்-8
                                        4. பெருங்காயம்-1/4 ஸ்பூன்
                                        5. மிளகு-1 ஸ்பூன்
                                        6. உப்பு-1 ஸ்பூன்
                                        செய்முறை:
                                        1. ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் துவரம் பருப்பு போட்டு பொன் நிறமாக வறுக்கவும்.
                                        2. பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொண்டு அதே கடாயில் கடலைபருப்பு,க.மிளகாய்,மிளகு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
                                        3. நன்கு ஆறியதும் மிக்ஸ்யில் போட்டு அத்துடன் பெருங்காயம்,உப்பு அரைத்து கொள்ளவும். பருப்பு பொடி ரெடி இதை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும்.

                                        ஸ்பினச் சப்பாத்தி

                                        ஸ்பினச் (பசலை கீரை) ஆண்டியாக்ஸிடண்ட்கள் கொண்ட கீரை.பசலை கீரை வைட்டமின் A , வைட்டமின் C, வைட்டமின் E, வைட்டமின் கே, மெக்னீசியம், ஃபோலேட், இரும்பு, விட்டமின் B2, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் B6, ஃபோலிக் அமிலம், தாமிரம், புரதம், பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு முக்கியமான சத்துகளை கொண்டது.இப்படி நிறைய சத்துகளை கொண்ட கீரைகளை நாம் தினமும் உணவில் சேர்க்க ஸ்பினச் சப்பாத்தி ஒரு வகை.

                                        தேவையான பொருட்கள் :

                                        1. கோதுமைமாவு-2 கப்
                                        2. உப்பு-3/4 ஸ்பூன்
                                        3. ஸ்பினச்( பசலை கீரை)-1 கப்
                                        செய்முறை:
                                        1. முதலில் ஸ்பினச் வேகவைத்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
                                        2. ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு,உப்பு,அரைத்து வைத்த ஸ்பினச், தண்ணீர் சேர்த்து நன்கு மாவை பிசைந்துகொள்ளவும்.
                                        3. 30 நிமிடம் கழித்து சப்பாத்தி மாவை தேவையான வடிவில் இடவும்.
                                        4. பின் தவாவை சூடாக்கி சப்பாத்தி போட்டு ரெண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுக்கவும்.
                                        5. ஸ்பினச் சப்பாத்தி ரெடி.

                                        காலிப்ளவர் 65

                                        IMAG0032.jpgதேவையான பொருட்கள்:
                                        1. காலிப்ளவர்- 1 சிறியது
                                        2. கடலைமாவு-4 ஸ்பூன்
                                        3. மைதா -4 ஸ்பூன்
                                        4. காரன்மாவு-2 ஸ்பூன்
                                        5. உப்பு-1 ஸ்பூன்
                                        6. இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
                                        7. மிளகாய்த்தூள்-1 1/2 ஸ்பூன்
                                        8. ரெட் கேசரி கலர்-சிறிது
                                        9. முட்டை-1
                                        10. லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
                                        11. தயிர்-4 ஸ்பூன்
                                        செய்முறை:
                                        1. காலிப்ளவர் பூவை சிறிதாக வெட்டி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைக்கவும்.
                                        2. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், கடலைமாவு,மைதா, காரன்மாவு,உப்பு,தயிர்,மிளகாய்த்தூள், முட்டை, லெமன் ஜூஸ், கேசரி கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
                                        3. பின் அதை Fridge  Freezer ல் 30 நிமிடம் வைத்து எடுத்து சூடான எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
                                        4. மொரு மொரு காலிப்ளவர் 65 ரெடி.
                                        குறிப்பு:

                                        Fridge ல் வைப்பதால் அதன் மசாலா நன்கு ஒட்டி இருக்கும்.

                                        கார போளி


                                        தேவையான பொருட்கள்:
                                        1. மைதா -1 கப்
                                        2. கோதுமைமாவு-1/4கப்
                                        3. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
                                        4. உப்பு-சிறிது
                                        5. நெய்-6 ஸ்பூன்
                                        6. காரட்- 1
                                        7. இட்லி மிளகாய்பொடி -2 ஸ்பூன்
                                        பூரணம் செய்ய:
                                        1. உருளைக்கிழங்கு -1
                                        2. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
                                        3. உப்பு-1/2 ஸ்பூன்
                                        செய்முறை:

                                        1. மைதா,கோதுமைமாவு,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பின் அதை 30 நிமிடம் ஊறவிடவும்.
                                        2. கூகேரில் உருளைக்கிழங்கு,தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
                                        3. தண்ணீர் முழுதும் வடித்து உருளைக்கிழங்கு தோலை நீக்கி நன்கு மசித்துகொள்ளவும்.பின் அதில் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
                                        4. ஒரு கவரில் நெய் தடவி பிசைந்து வைத்து உள்ள மாவில் ஒரு உருண்டை எடுத்து சிறியதாக தட்டி கொள்ளவும்.
                                        5. பின் அதன் நடுவில் பூரணத்தை வைத்து நன்கு மூடி உருண்டையாக செய்து கொள்ளவும்.
                                        6. பின் கையில் நெய் தடவி நன்கு மெலிதாக வரும் வரை தட்டி கொள்ளவும்.
                                        7. அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள போளி போட்டு சிறிது நெய் ஊற்றி ரெண்டு பக்கமும் விடவும்.
                                        8. பின் அதன் மேல் துருவிய காரட், இட்லி மிளகாய்பொடி தூவி தவாவில் 30 நொடி போட்டு உடனே எடுக்கவும்.

                                        ஸ்வீட் போளி

                                        தேவையான பொருட்கள்:
                                        1. மைதா -1 கப்
                                        2. கோதுமைமாவு-1/4கப்
                                        3. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
                                        4. உப்பு-சிறிது
                                        5. நெய்-6 ஸ்பூன்
                                        பூரணம் செய்ய:
                                        1. கடலைபருப்பு-1கப்
                                        2. வெல்லம்-1/2கப்
                                        3. ஏலக்காய்-2
                                        செய்முறை:

                                        1. மைதா,கோதுமைமாவு,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பின் அதை 30 நிமிடம் ஊறவிடவும்.
                                        2. கூகேரில் கடலைபருப்பு 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விடவும்.
                                        3. தண்ணீர் முழுதும் வடித்து கடலைபருப்பு,வெள்ளம்,ஏலக்காய் சேர்த்து மிக்ஸ்யில் ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.
                                        4. ஒரு கவரில் நெய் தடவி பிசைந்து வைத்து உள்ள மாவில் ஒரு உருண்டை எடுத்து சிறியதாக தட்டி கொள்ளவும்.
                                        5. பின் அதன் நடுவில் பூரணத்தை வைத்து நன்கு மூடி உருண்டையாக செய்து கொள்ளவும்.
                                        6. பின் கையில் நெய் தடவி நன்கு மெலிதாக வரும் வரை தட்டி கொள்ளவும்.
                                        7. அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள போளி போட்டு சிறிது நெய் ஊற்றி ரெண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

                                        அன்னாசிபழம் கேசரி

                                        தேவையான பொருட்கள் :
                                        1. ரவை – 1 கப்
                                        2. பால் - 1 கப்
                                        3. சர்க்கரை – 1 கப்
                                        4. அன்னாசிபழம்– 1/2 கப்
                                        5. தண்ணீர் – 1 கப்
                                        6. முந்திரி-5
                                        7. திராட்சை - 5
                                        8. நெய் - 6 ஸ்பூன்
                                        9. லெமன்கேசரி கலர் -சிறிது
                                        செய்முறை :
                                        1. ஒரு கடாயில் சிறிதளவு நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.
                                        2. பின் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரிபருப்பு,திராட்சை போட்டு வறுத்து அதை தனியாக வைத்து கொள்ளவும்.
                                        3. அதே கடாயில் சிறிதாக நறுக்கிய அன்னாசிபழம் சேர்த்து வதக்கி ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.
                                        4. அதே கடாயில் பால், தண்ணீர்,கேசரிகலர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
                                        5. பின்னர் கொதித்த உடன் அதில் வறுத்த ரவை,அன்னாசிபழம் போட்டு கிளறவும்.
                                        6. கேசரி கெட்டியானதும் இறக்கி, அதன்மேல் வறுத்த முந்திரி, திராட்சை, 3 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.