Pages

வடைகறி

தேவையான பொருட்கள்:

  1. கடலைபருப்பு-1 கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை-சிறிது
  6. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  7. தனியாதூள்-3/4 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  9. உப்பு-3/4 ஸ்பூன்
  10. கொத்தமல்லி-சிறிது
  11. பட்டை-2
  12. கிராம்பு-2
  13. பிரியாணி இலை -2
  14. சோம்பு-1/4 ஸ்பூன்
  15. எண்ணெய் -4 ஸ்பூன்
செய்முறை:
  1. கடலைபருப்பு 3 மணி நேரம் ஊறவைத்து, கோர கோர வென தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  2. பின் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி அதை இட்லி போல இட்லி தட்டில் வைத்து வேகவைத்து கொள்ளவும்.
  3. வெந்ததும் ஆறவைத்து உதிர்த்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  6. பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. 3 நிமிடம் கொதித்ததும் உதிர்த்து வைத்து உள்ள கடலைபருப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. கொதித்ததும் நறுக்கி வைத்த கொத்தமல்லி தூவி இட்லி, தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்.

முட்டை மசாலா

தேவையான பொருட்கள்:
  1. முட்டை-3
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  5. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  7. தனியாதூள்-1/2 ஸ்பூன்
  8. உப்பு-3/4 ஸ்பூன்
  9. எண்ணெய் -3 ஸ்பூன்
  10. கருவேப்பிலை-சிறிது
  11. கடுகு-1/4 ஸ்பூன்
  12. உள்ளுதம்பருப்பு-1/2 ஸ்பூன்
  13. கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  3. பின் வெட்டிவைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி மசிந்ததும் மஞ்சள்தூள்,மிள்கைதூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் 1 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
  5. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் முட்டை உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மசாலாவில் போடவும்.
  6. பின் அதை மூடி வைத்து வேகவிடவும்.3 நிமிடம் கழித்து திறந்து முட்டை உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி  சப்பாத்தி,சாதத்துடன் பரிமாறவும்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:
  1. வாழைக்காய் - 1
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
  4. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. பூண்டு-2 பல்
  7. பச்சைமிளகாய்-4
  8. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
  9. பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை - சிறிது
  11. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  12. உப்பு-3/4 ஸ்பூன்
  13. எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
  1. வாழைக்காய் தோல் சீவி சிறு சிறு சதுரவடிவில் வெட்டிக்கொள்ளவும்.
  2. கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பெருங்காயம்,தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் வாழைக்காய் சேர்த்து வதக்கவும்.
  4. வாழைக்காய் பாதி வெந்ததும் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
  5. வாழைக்காய் வெந்ததும் தேங்காய் துருவல் தூவி கிளறி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்:

  1. உருளைகிழங்கு -2
  2. கடுகு-1/4 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு-1/4 ஸ்பூன்
  4. பூண்டு-3 பல்
  5. கருவேப்பிலை-சிறிது
  6. எண்ணெய் -3 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
  8. தனியாதூள் -1/2 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  10. உப்பு-3/4 ஸ்பூன்
செய்முறை:
  1. உருளைகிழங்கை தோல் சீவி சின்ன சின்ன சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தட்டிவைத்த பூண்டு,வெட்டிவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  3. பாதி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள் சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில்வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.
  4. நன்கு வெந்ததும் கிளறி பரிமாறவும். சுவையான உருளைகிழங்கு வறுவல் ரெடி.

பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன்-250 கிராம்
  2. கொத்தமல்லி-1 பௌல்
  3. மிளகு-2 ஸ்பூன்
  4. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
  6. வெங்காயம்-1
  7. இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
  8. உப்பு-1 ஸ்பூன்
  9. எண்ணெய் -4 ஸ்பூன்
செய்முறை:
  1. கொத்தமல்லி, மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த கொத்தமல்லி,மிளகு மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  3. வதங்கியதும் வெங்காயத்தை அரைத்து விழுதை சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
  5. வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் வதக்கி சிக்கன் சேர்த்து வதக்கவும்.
  6. சிக்கன் வதக்கி மூடிபோட்டு வேகவிடவும்.சிக்கனில் வரும் தண்ணீரில் சிக்கன் வெந்துவிடும்.
  7. சிக்கன் முக்கால் பாகம்  வெந்ததும் மூடிதிறந்து நன்கு கிளறவும்.
  8. மசாலாவில் உள்ள  தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்துவந்ததும் கொத்தமல்லி இலை  தூவி கிளறினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி ,பிரியாணியுடன் பரிமாறவும்.

மலபார் சிக்கன் கறி

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன்- 1/2 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
  6. உப்பு-3/4 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை-சிறிது
  8. கொத்தமல்லி-சிறிது
  9. எண்ணெய் -3 ஸ்பூன்
  10. தேங்காய் பால் - 1 கப்
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்


வறுத்து அரைக்க

  1. மிளகாய் வற்றல் - 3
  2. மல்லி விதை - 1 ஸ்பூன்
  3. மிளகு - 1 ஸ்பூன்
  4. பட்டை - 1
  5. கிராம்பு - 3
  6. ஏலக்காய் - 2
செய்முறை :
  1. வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் வறுத்து அரைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் சிக்கன்  சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
  5. கோழி பாதி வெந்ததும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
  6. சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
  7. சுவையான மலபார் சிக்கன் கறி தயார்.

பீன்ஸ் தொக்கு

தேவையான பொருட்கள்:

  1. பீன்ஸ்- 1 bowl (நறுக்கியது)
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. கடுகு-1/4 ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
  6. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள்- 3/4 ஸ்பூன்
  8. தனியாதூள்-3/4 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  10. எண்ணெய் -3 ஸ்பூன்
  11. உப்பு-1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கியதும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  4. 3 நிமிடம் வதக்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. சிறு தீயில் வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு நன்கு வேகவிடவும்.பீன்ஸ் வெந்ததும் நன்கு கிளறி பரிமாறவும்.

முட்டை குருமா

தேவையான பொருட்கள்:
  1. முட்டை-3
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  6. தனியா தூள்-3/4 ஸ்பூன்
  7. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  8. உப்பு-3/4 ஸ்பூன்
  9. கருவேப்பிலை-சிறிது
  10. கொத்தமல்லி-சிறிது
  11. பட்டை-2
  12. கிராம்பு-2
  13. பிரிஞ்சி இலை -2
  14. எண்ணெய் -3 ஸ்பூன்
  15. தேங்காய் துருவல்-3/4 கப்
செய்முறை:
  1. முதலில் முட்டை வேகவைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை,பட்டை, கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,தனியா தூள் ,உப்பு சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.
  5. பின் தேங்காய் துருவல் மிக்ஸ்யில் போட்டு நன்கு அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
  6. நன்கு கொதித்ததும் வேகவைத்து வெட்டி வைத்த முட்டை, கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.

சன்னா சாட்

தேவையான பொருட்கள்:

  1. சன்னா - 1 கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
  6. தனியாதூள்-1/2 ஸ்பூன்
  7. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  8. உப்பு - 3/4ஸ்பூன்
  9. கரம்மசாலா- 1/2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி-சிறிது
  11. சாட் மசாலா-1/4ஸ்பூன்
  12. ஸ்வீட் சட்னி- 2 ஸ்பூன்
  13. கிரீன் சட்னி-2 ஸ்பூன்
  14. ஒமபொடி -1 கப்
  15. தயிர்-1/2 கப்
  16. லெமன் ஜூஸ் -2 ஸ்பூன்
  17. பட்டர் -2 ஸ்பூன்
செய்முறை:
  1. சன்னா 6 மணிநேரம் ஊற வைக்கவும்.பின் கூகரில் சன்னா , 2கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய  வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள்,உப்பு, கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.
  6. 1 நிமிடம் வதக்கி வேக வைத்த சன்னா வேகவைத்த தண்ணியுடன்  சேர்த்து கிளறவும்.
  7. 5 நிமிடம் கொதித்ததும் சாட் மசாலா தூவி கிளறி இறக்கவும்.
  8. பின் ஒரு தட்டில் முதலில் செய்து வைத்த சன்னா பரிமாறவும்.
  9. பின் அதன் மேலே 1 ஸ்பூன் தயிர்,ஸ்வீட் சட்னி,கிரீன் சட்னி ,பொடியாக நறுக்கிய வெங்காயம்,சிறிது லெமன் ஜூஸ்,ஓமபோடி, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூடான சன்னா சாட் தயார்.