Pages

மலபார் எக் கறி

தேவையான பொருட்கள்:


    1. முட்டை - 3
    2. வெங்காயம் - 1
    3. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
    4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    5. மல்லி தூள் - 3/4 ஸ்பூன்
    6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    7. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
    8. தேங்காய் பால் - 2 கப்
    9. எண்ணெய் - 3 ஸ்பூன்
    10. கடுகு-1/4 ஸ்பூன்
    11. சீரகம் - 1/4 ஸ்பூன்
    12. கறிவேப்பிலை-சிறிது
    13. உப்பு- 3/4 ஸ்பூன்
    செய்முறை:
    1. முட்டை வேகவைத்து பாதியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
    2. கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,நீளவாக்கில் மெலிசாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    4. பின் அதில் மிளகாய்த்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    5. மசாலா நன்கு கொதித்ததும், தேங்காய்பால் சேர்த்து கொதிவர ஆரம்பித்ததும் முட்டை போட்டு மசாலாவை இறக்கவும்.
    6. கொத்தமல்லி இலை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.  

    மிளகு சாதம்

    தேவையான பொருட்கள்:
    1. வெங்காயம்-1
    2. பச்சை மிளகாய்-3
    3. மிளகு-1 ஸ்பூன்
    4. கருவேப்பிலை-சிறிது
    5. கடுகு-1/4 ஸ்பூன்
    6. உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
    7. உப்பு-3/4 ஸ்பூன்
    8. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    9. வடித்த சாதம்-2 பௌல்
    10. எண்ணெய் -3 ஸ்பூன்
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மெலிதாக வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள்,உப்பு,மிளகுதூள் சேர்த்து கிளறி வடித்த சாதம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
    3. பின் சாதத்தை நன்கு கிளறினால் மிளகு சாதம் ரெடி.

    பிந்தி மசாலா

    தேவையான பொருட்கள்:

    1. வெண்டைக்காய்-250 கிராம்
    2. வெங்காயம்-1
    3. தக்காளி-1
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    5. சீரகம்-1/2 ஸ்பூன்
    6. கரம்மசாலா-1/4 ஸ்பூன்
    7. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
    8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
    9. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    10. உப்பு-3/4 ஸ்பூன்
    11. எண்ணெய் -5 ஸ்பூன்
    12. கருவேப்பிலை-சிறிது
    13. கொத்தமல்லி-சிறிது
    செய்முறை:
    1. 1/2 இன்ச் அளவில் வெண்டைக்காய் வெட்டி கொள்ளவும்.
    2. பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய்,சிறிது உப்பு  சேர்த்து வேகும் வரை  வதக்கவும்.
    3. வெண்டைக்காய் வெந்ததும் எடுத்து வைத்து கொண்டு அதே கடாயில்  மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை,சீரகம் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
    5. பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் கரம்மசாலா,மிளகாய்த்தூள்,தனியாதூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
    6. அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
    7. பின் அதில் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும், பிந்தி மசாலா ரெடி.

    தேங்காய் பால் சாதம்

    தேவையான பொருட்கள்:
    1. பாஸ்மதி அரிசி-1 கப்
    2. வெங்காயம்-1
    3. பச்சைமிளகாய்-4
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
    5. புதினா -சிறிது
    6. கொத்தமல்லி-சிறிது
    7. பட்டை -2
    8. கிராம்பு-2
    9. பிரியாணி இலை -2
    10. ஏலக்காய்-2
    11. உப்பு-3/4 ஸ்பூன்
    12. நெய்-4 ஸ்பூன்
    13. தேங்காய் பால் - 2 கப்
    14. கரம் மசாலா-1/2 ஸ்பூன்
    செய்முறை: 
    1. பாஸ்மதி அரிசி அரைமணி நேரம் ஊறவைக்கவும் , பின்  கூக்கேரில்  நெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை போட்டு பொரிந்ததும் மெலிதாக வெட்டிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    3. பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
    4. வதங்கியதும் கரம்மசாலா,உப்பு சேர்த்து வதக்கவும்.
    5. அதில் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து 1 நிமிடம் வதக்கி, 2 கப் தேங்காய் பால் சேர்த்து கூகேரை மூடி 2 விசில் விடவும்.
    6. ஸ்பெஷல் தேங்காய் பால் சாதம் ரெடி. சிக்கன் கிரேவி ,குருமா வுடன் பரிமாறவும்.
    குறிப்பு :

    இதே முறையில் electric ரைஸ் கூகேரில் செய்யலாம்.