Pages

சில்லி இறால் வறுவல்

தேவையான பொருட்கள்:
  1. இறால் - அரை கிலோ
  2. பூண்டு - 6 பல்
  3. பச்சை மிளகாய் - 2
  4. மிளகு தூள் - 2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 1
  6. கறிவேப்பிலை - சிறிது
  7. மஞ்சள்தூள் - சிறிது 
  8. எண்ணெய் - 4
  9. உப்பு -1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  2. பின் பொடியாக நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும். சில்லி இறால் வறுவல் ரெடி.

அவகாடோ பிரட் சான்ட்விச்

தேவையான பொருட்கள்:
  1. அவகாடோ - 1
  2. வெங்காயம் -1
  3. தக்காளி -1
  4. பச்சை மிளகாய் -1
  5. கொத்தமல்லி - சிறிது 
  6. லெமன்  சாறு - 1 ஸ்பூன் 
  7. உப்பு - 1/2 ஸ்பூன் 
  8. பிரட்- 4
  9. பட்டர்- சிறிது 
செய்முறை:

  1. அவகாடோவை ஓடு பாத்திரத்தில்  போட்டு நன்கு மசித்து கொள்ளவும் 
  2. பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் ,கொத்தமல்லி சேர்த்து கிளறவும். 
  3. பின் அதில் லெமன் சாறு,உப்பு சேர்த்து நன்கு கிளறி இரண்டு பிரட் துண்டுகளின் நடுவில் வைத்து, சூடான தவில் சிறிது பட்டர் தடவி இருபுறமும் திருப்பி போட்டால்  அவகாடோ பிரட் சான்ட்விச் ரெடி (சீஸ் 1 துண்டு வைத்தும் டோஸ்ட் செய்யலாம் )
குறிப்பு :

டோஸ்ட்டர் ஓவன் இருந்தால் அதில் டோஸ்ட்ல் வைத்து இருபக்கமும் திருப்பி டோஸ்ட் செய்து எடுக்கலாம் 

பொன்னாங்கனி கீரை கூட்டு

தேவையான பொருட்கள் :
  1. பொன்னாங்கனி கீரை - 1 கட்டு
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி-1
  4. பூண்டு - 8 பல் 
  5. சிறுபருப்பு - 1 கப்
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
  8. பெருங்காயம் - சிறிது 
  9. எண்ணெய் - 2 ஸ்பூன் 
  10. கடுகு - 1/4 ஸ்பூன் 
  11. உளுத்தம் பருப்பு- 1/4 ஸ்பூன்
  12. சீரகம் - 1/4 ஸ்பூன்
செய்முறை :
  1. சிறுபருப்பை கூகேரில் வைத்து ஒரு விசில் விடவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம் பருப்பு , சீரகம் போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் பூண்டை தட்டி போட்டு தக்காளி நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொத்திக்கவிடவும். 
  5. 5 நிமிடம் பின் வேகவைத்த சிறுபருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பொன்னாங்கனி கீரை கூட்டு ரெடி.

பேக்ட் சிக்கன்

தேவையான பொருட்கள்
  1. சிக்கன் லெக் பீஸ் - 4
  2. தயிர் - அரை கப்
  3. மிளகாய் தூள் - 1ஸ்பூன் 
  4. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
  5. மிளகு தூள் - 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. சாட் மசாலா - 1/4 ஸ்பூன
  8. ஃபுட் கலர் - சிறிது
  9. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  10. எண்ணெய் -2 ஸ்பூன்
  11. லெமன் - 1
செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா ,மிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் , 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை பிரட்டி ஊற விடவும்.
  2. சிக்கனை மசாலாவில் 2 மணி நேரம் ஊறவிடவும்.
  3. 220 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். 10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும். நன்கு வெந்ததும் 2 நிமிடத்திற்கு அவனில் பராயில் வைத்து கிரிஸ்பியாக்கவும்.
  4. பின் சிக்கன் மேல் லெமன் சாரை பிழிந்து பரிமாறவும்.

காளான் மஞ்சூரியன்


 தேவையான பொருட்கள் :
  1. காளான் - 10
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
  3. சோள மாவு - 4 ஸ்பூன் 
  4. மைதா - 2 ஸ்பூன் 
  5. சோயா சாஸ் - 2'ஸ்பூன்
  6. உப்பு - 1ஸ்பூன் 
  7. எண்ணெய் - 2 கப்
  8. வெங்காயம் - 1
  9. சில்லி சாஸ் - 1 ஸ்பூன் 
  10. தக்காளி கெட்சப் - 1 1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. ஒரு பௌலில் சோள மாவு, மைதா,  1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் சோயா சாஸ், 1/2 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். 
  3. ஒரு கடாய் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும். 
  4. பிறகு வேறு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.சுவையான காளான் மஞ்சூரியன் ரெடி.

கத்திரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:
  1. கத்தரிக்காய் - 2
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. கடுகு - சிறிது 
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  8. மல்லித் தூள் - 1/4 ஸ்பூன் 
  9. உப்பு - 1/2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி - சிறிது 
  11. எண்ணெய் - 2 ஸ்பூன் 
செய்முறை :
  1. கூகேரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. பின் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனிய தூள்,உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.
  4. கூக்கரை திறந்து தண்ணீரை வடித்துவிட்டு கத்தரிக்காயை நன்கு மசித்துவிட்டு வடித்த தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
  5. கத்திரிக்காய் சட்னி ரெடி .கொத்தமல்லி தூவி பரிமாறவும். இட்லி,தோசையுடன் நன்றாக இருக்கும்.


வெஜிடேபிள் சமோசா


தேவையான பொருட்கள்:
  1. உருளைக்கிழங்கு - 2
  2. பச்சை பட்டாணி - 1/2 கப்
  3. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  4. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. சீரகம்- 1/4 ஸ்பூன்
  7. உப்பு - 3/4 ஸ்பூன் 
  8. மைதா - 2 கப் 
  9. எண்ணெய் - 3 கப்
  10. தண்ணீர் - 2 கப் 
செய்முறை: 
  1. ஒரு பெரிய பௌலில் மைதா, 1/4 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 
  2. பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிட வேண்டும். 
  3. பின்னர் ஒரு பௌலில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி போட்டு, நன்கு ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். 
  4. பின்பு ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் நீளமாக வேட்டிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு கிளறவும்.
  6. ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி,அதை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். பின் அதை அரைவட்டமாக வெட்டி ,அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  7. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சமோசாக்களை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  8. சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி.தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.




தக்காளி சூப்

                                             
தேவையான பொருட்கள்:
  1. தக்காளி - 3
  2. காரட் -1
  3. பீட்ரூட் - 1 சிறிய துண்டு 
  4. பூண்டு - 3 பல்
  5. இஞ்சி - சிறியது
  6. கொத்தமல்லி காம்பு - 4 துண்டு 
  7. பட்டை - 1
  8. கிராம்பு - 2
  9. பிரியாணி இலை - 1
  10. கார்ன் மாவு - 1 ஸ்பூன் 
  11. உப்பு - 3/4 ஸ்பூன் 
  12. மிளகு - 10
  13. பட்டர் - 1/2 ஸ்பூன்
  14. தண்ணீர் - 2 கப்ஸ் 
  15. பிரட் - 2
செய்முறை:
  1. பிரஷர் கூகேரில் தக்காளி,நறுக்கிய காரட், பீட்ரூட்,பட்டை,கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, கொத்தமல்லி காம்பு, இஞ்சி,பூண்டு, தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
  2. பின் தக்காளியின் தோலை எடுத்துவிடவும்.
  3. பட்டை,கிராம்பு,பிரியாணி இலையை நீக்கிவிட்டு,மீதமுள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சாருடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. 2 நிமிடம் கொதித்ததும் கார்ன் மாவை தண்ணீரில் கட்டிபடாமல் கரைத்து சூப்புடன் சேர்க்கவும்.
  6. சிறு தீயில் வைத்து 4 நிமிடம் கொதிக்க விட்டு உப்பு,பட்டர் சேர்த்து கிளறி பிரட் துண்டுகளை பொரித்து மேலே போட்டு பரிமாறவும்.

முந்தரி பகோடா

தேவையான பொருட்கள்:
  1. முந்திரி - 1 கப் 
  2. கடலை மாவு - 1/2 கப் 
  3. அரிசி மாவு - 2 டீஸ்பூன் 
  4. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
  5. நெய் - 2 டீஸ்பூன் 
  6. உப்பு - 1/2 ஸ்பூன் 
  7. எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
  1. முதலில் முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில்  போட்டு  பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி பகோடா ரெடி!!!

Stuffed கத்திரிக்காய்

                                            
தேவையான பொருட்கள்:
  1. கத்தரிக்காய்- 6
  2. வெங்காயம் - 1
  3. இஞ்சி - சிறிது
  4. பூண்டு - 5 பல்
  5. க.மிளகாய் - 5
  6. சோம்பு - 1 ஸ்பூன்
  7. சீரகம்-1/2 ஸ்பூன்
  8. தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
  9. கசகசா- 1/2 ஸ்பூன்
  10. பட்டை - 1
  11. கிராம்பு - 2
  12. எண்ணெய் - 5 ஸ்பூன்
  13. கடுகு - 1/4 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன்
செய்முறை:

  1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாயை எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
  2. அத்துடன் சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. கத்தரிக்காயை சுத்தம் செய்து மேலும் கீழும் சிறிது இடம் விட்டு கீறி அதில் அரைத்த விழுதை வைக்கவும்.
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,கத்தரிக்காயை போட்டு வதக்கி எடுத்தால் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி.

செட்டிநாடு வறுத்த சிக்கன்

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 2
  3. காய்ந்த மிளகாய் – 5
  4. சோம்பு – 1 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் – 2
  6. சின்ன வெங்காயம் –10
  7. தக்காளி – 1
  8. கறிவேப்பிலை-சிறிது
  9. கடலை மாவு – 1/2 கப்
  10. தேங்காய்- 1/2 கப்
  11. எண்ணெய்- 5 ஸ்பூன்
  12. உப்பு - 1 ஸ்பூன் 

செய்முறை:
  1. மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து நன்றாக அரைக்கவும். 
  2. சின்ன துண்டுகளாக வெட்டிவைத்த சிக்கனுடன்அரைத்துவிழுது,இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய் ஒரு ஸ்பூன்,உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள்,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் சற்று மொறு மொறுப்பாக ஆகும். 
  4. கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
  5. மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 
  6. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். 
  7. இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. 

கோதுமை அல்வா

                          

தேவையான பொருட்கள் :
  1. கோதுமைமாவு - 1/2 கப்
  2. சர்க்கரை - 1 கப்
  3. தண்ணீர் -2 கப் 
  4. நெய் - 5 ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன் 
  6. முந்திரி பருப்பு - 5
  7. கேசரி கலர் பொடி - சிறிது 

செய்முறை :

  1. கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவை போல பிசைந்து கொள்ளவும்.
  2. பின் அதை சிறிது சூடான தண்ணீரில் போட்டு 5-7 மணி நேரம் ஊறவிடவும்.
  3. கோதுமை கலவையை கலக்கி வடிதட்டில் ஊற்றி திப்பியை எடுத்து விடவும்.
  4. Nonstick பாத்திரத்தில் சக்கரை, 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.
  5. கோதுமை கலவையின் மேல் தெளிந்து இருக்கும் தண்ணீரை முடிந்தவரை எடுத்து விடவும்.
  6. சக்கரை பாகு போல வந்ததும் கேசரி கலர்,கலந்து வைத்த கோதுமை கலவையை சேர்த்து கிளறவும்.
  7. பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  8. நெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த முந்தரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறினால் கோதுமை அல்வா ரெடி.

ரிப்பன் பகோடா




    தேவையான பொருட்கள்:                                                                   

    1. கடலைமாவு - 2 கப்
    2. அரிசி மாவு - 1 கப்
    3. மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    4. பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்
    5. எண்ணெய் -பொரிக்க
    6. உப்பு - 1 ஸ்பூன்

    செய்முறை :



    1. கடலைமாவையும், அரிசிமாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்தூள், பெருங்காயப்பொடி, உப்பு, 3 ஸ்பூன் சூடான எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பிசையவும்.



    2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை அச்சில் வைத்து, பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.ரிப்பன் பகோடா ரெடி.