Pages

செட்டிநாடு வறுத்த சிக்கன்

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 2
  3. காய்ந்த மிளகாய் – 5
  4. சோம்பு – 1 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் – 2
  6. சின்ன வெங்காயம் –10
  7. தக்காளி – 1
  8. கறிவேப்பிலை-சிறிது
  9. கடலை மாவு – 1/2 கப்
  10. தேங்காய்- 1/2 கப்
  11. எண்ணெய்- 5 ஸ்பூன்
  12. உப்பு - 1 ஸ்பூன் 

செய்முறை:
  1. மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து நன்றாக அரைக்கவும். 
  2. சின்ன துண்டுகளாக வெட்டிவைத்த சிக்கனுடன்அரைத்துவிழுது,இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய் ஒரு ஸ்பூன்,உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள்,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் சற்று மொறு மொறுப்பாக ஆகும். 
  4. கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
  5. மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 
  6. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். 
  7. இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. 

0 comments:

Post a Comment